Navigation


RSS : Articles / Comments


பிரபாகரனுக்குப் பின் இலங்கையில் ஈழ தமிழர்கள் நிலை?

3:14 PM, Posted by sathiri, No Comment

மீதெழல் .....

4:00 PM, Posted by sathiri, No Comment

 மீதெழல்  -சிறுகதை-சாத்திரி

வேலை முடிந்து வெளியே வந்ததும் கைத்தொலைபேசியை எடுதுப்பர்தேன். நாங்கள் பத்திரமாக வந்து சேர்ந்து விட்டோம் என்று குறுஞ்செய்தி வந்திருந்தது. ‘பெண்டாட்டி ஊருக்கு போயிட்டா.’ என்கிற மகிழ்ச்சி மனதில் துள்ளியது. கோடை விடுமுறை மனைவியும் மகளும் ஊருக்கு போய் விட்டார்கள். எனக்கு புதிய வேலைஎன்பதால் லீவு எடுக்க முடியவில்லை. இல்லையில்லை, லீவு எடுக்க விரும்பவில்லை என்றும் சொல்லலாம். அவர்களை ஊருக்கு அனுப்பி விட்டுக் கொஞ்சம் தனிமையாக இருக்க மனது விரும்பியது.
இன்று பிரான்சின் குடியரசு தினம். பொதுவிடுமுறை நாள். ஆனால் எனக்கு மட்டும் சரியான வேலை. நாடு முழுவதும் ஏன் உலகம் முழுவதுமே விடுமுறையானாலும் உணவு விடுதிகளில் வேலை செய்பவர்களுக்கு மட்டும் அன்றுதான் வேலை அதிகமாகவிருக்கும். இந்தவேலையை விட்டுத்தொலைக்க வேணும் எண்டு பலதடவை யோசித்தாலும், இதில் கிடைக்கும் சம்பளத்தை நினைத்து பேசாமல் இருந்துவிடுகிறேன். கோடை வெய்யிலில் வேலையால் வியர்த்த உடம்பு,  பைக்கை ஓடத் தொடங்கியதும்  மிதமான  கடல் காற்று பட்டு இதமாகவிருந்தது. வீடு போனதும் ஒரு குளியல் போட்டுவிட்டு சில்லென்ற பியர் ஒன்றை உறுஞ்சினால்… அதுவே என் இன்றைய சொர்க்கம்  என்று நினைத்தபடி வந்துகொண்டிருந்த எனக்கு, எதிரே கடற்கரை சாலையை  காவல்துறையினர் மறித்து தடுப்பு போட்டு வாகனங்களை வேறு பக்கத்தால் திருப்பி விட்டுக்கொண்டிருப்தை கவனித்ததும், ஐந்து நிமிடத்தில் போய் சேரவேண்டிய வீட்டுக்கு இனி இருபது நிமிடம் சுத்தி போகவேணும். எனக்கும் சொர்க்கத்துக்கும்மான  தூரத்தை அதிகரித்த அந்த அதிகாரியை திட்டியபடியே  வீடு வந்து ஆடைகளை அவிழ்த்தெறிந்து குளியல் கூண்டுக்குள் நுழைந்து தண்ணீரை தலையில் தண்ணீரை திறந்து விடும்போது கைதொலைபேசி அடிக்கும் சத்தம்.


‘ச்சே …எனக்கு மட்டும்தான் இப்பிடியா?’ குளியலறையிலோ கழிப்பறையிலோ  இருக்கும்போதுதான் தொலைபேசி அடிக்கும். கைத்தொலைபேசி  நின்று இரண்டாம் தரமும் அடித்து ஓய்ந்து. இப்போ வீட்டு தொலைபேசி. இரண்டு இலக்கமும் தெரிந்திருப்பதால் யாரோ இங்கு எனக்கு நெருக்கமான நபர் என்று மட்டும் ஊகிக்க முடித்து. ஏதும் அவசரமாகவிருக்கும். பாதிக்குளியலில்  நிறுத்தி துடைத்து விட்டு அதே அவசரத்தில் ஜட்டியை  போடும்போது கால் பெருவிரல் ஜட்டியில்  மாட்டிவிட , விழுந்து விடாமல் ஒற்றைக்காலில் ஒரு சிலசெக்கன்கள் ஆடும் அந்த நடனம் இருக்கிறதே அதை  பரதத்தில் அடக்கலாமா? வெஸ்டனில்  அடக்கலாமா ? என்று எனக்குத் தெரியாது. ஆனால் ஒற்றைக்காலை தூக்கிய  நடராஜர் சிலையை பார்க்கும் போதெல்லாம் இவரும் என்னைப்போலவே  ஜட்டி போடும்போது அனுபவப் பட்டிருப்பாரோ என்று நினைப்பதுண்டு. உடை மாற்றி வந்து பார்த்தேன். யோகனும் தேவகியும் அழைத்திருந்தார்கள்.
‘திரும்பவும் எதோ குடும்பப் பஞ்சாயத்து போல கிடக்கு. யோகன் கனகாலமா ஒழுங்காத்தானே  இருக்கிறான். திரும்ப தொடங்கிட்டானோ’?
யோகனுக்கு அழைப்பு போனது. எடுத்ததுமே,


“டேய் எங்கை நிக்கிறாய் ? பெரிய பிரச்னை. ஒருக்கா அவசரமா வா…”
என்று விட்டு நிறுத்தி விட்டான். கன காலத்துக்குப் பிறகு இன்று நிறைய குடித்திருக்கிறானென்று கதையிலையே விளங்கியது. என் இன்றைய சொர்க்கம் நரகமாகப் போகிறது என்று மட்டும் தெளிவா தெரிந்தது. அவர்களின் வீட்டுக்கு போய்க்கொண்டிருக்கும் வழியிலேயே உங்களுக்கு அவர்களைப்பற்றி சுருக்கமாக சொல்லிவிடுகிறேன்.
௦௦௦௦௦௦

ஊரில் கனகரத்தினம் என்றால் தெரியாதவர் இல்லை. பரம்பரை பணக்காரர். யாழ் நகரில் இரும்புக்கடை , ஒரு சினிமா தியேட்டர், உணவு விடுதியெனப் பல தொழில்கள் செய்து கொண்டிருந்தவர். அப்படியானவருக்கு அரசியலும், அதிகாரச் செல்வாக்கும், ஊரில் ஒரு தனி மரியாதை இருக்குமெனச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அவருக்கு ஒரு மகளும் மகனும் இருந்தனர். அப்பாவுக்குப் பெண்பிள்ளைகள் மேல் அதிக பாசமிருப்பதைப்போலவே மகள் மீது கனகருக்கும் அளவு கடந்த பாசம். கூடவே கொண்டு திரிவார். அவளை உடுவில்  மகளிர் கல்லூரியில் சேர்த்து, அவளுக்காகவே ஒரு புது கார் வாங்கி, டிரைவர் வைத்தது மட்டுமல்ல அவள் வளர.. வளர ..வீட்டு மதிலும் உயர்த்து கொண்டே போய், அவள் எட்டாவது படிக்கும்போது   வயதுக்கு வந்துவிட, வீட்டு மதில் கோட்டை சுவர்போலாவாகி உள்ளே நடப்பது எதுவுமே வெளியே தெரியாமல் போய் விட்டது மட்டுமல்ல அவள் வெளியே வருவதும் குறைந்து போனது. ஒருநாள் கோவில் திருவிழாவில் சேலையில் வந்திருந்த அவளைக் கண்டபோதுதான் ஊர் இளசுகள் எல்லாமே ‘அட  தேவகியா?’ இதுவென்று வாய்பிளந்து பார்த்தார்கள். அன்றுதான் நானும் அவளைப் பார்த்தேன். மொத்த அழகையும் குத்தகைக்கு எடுத்து வைத்திருந்தவள் போல இருந்தது.
அதற்குப்பின்னர் தேவகியின் கார் பாடசாலைக்கு போய்வரும் போதெல்லாம் சந்தியில்  இளசுகள் கூட்டம் அவளின் பார்வைக்காக ஏங்கிக் கிடந்தது. அதிலொருவன் தான் யோகன். விடயம் கனகரின் காதுக்குபோக, உலகத்திலையே கார் யன்னலுக்குத் திரைசீலை போட்டவர்  என்கிற பெருமையை பெற்றுக்கொண்டார். தேவகியின் பார்வை கிடைக்காமல் போனாலும்  காரை பார்த்தாலே போதுமென்றோ அல்லது எதோ ஒரு நம்பிக்கையில் இளசுகள் கூட்டம்  சந்தியில் காத்து நிற்கத்தான் செய்தது. ‘நீ தேவகிக்கு பின்னால் அலையவில்லையா ?’ என்கிற உங்கள் மனக்குரல் எனக்கு கேட்கிறது. எத்தனை தித்திப்பாக இருந்தாலும் அது எட்டாப்பழம் என்று எனக்குத்தெரியும். அதனால் நேரத்தை வீணடிக்கவில்லை.

ஒருநாள் வாசலில் நின்று போகிறவர் வருகிறவருக்கெல்லாம் கனகர், மகள் பத்தாவது பாஸ் பண்ணி விட்டாள் என்று இனிப்புக் கொடுத்துக்கொண்டிருந்தார். என்னையும் கூபிட்டு, “நீ பாசா?” என்று கேட்டு நீட்டிய இனிப்பை ‘ஒமென்றபடியே’ஒன்றை எடுத்துக்கொண்டு போய் விட்டேன். யோகன் பெயிலாகி வீட்டில் திட்டு வாங்கித் தனியார் கல்விநிலையமொன்றில் சேர்த்திருந்தான். அதுக்குப்பிறகு அவனை அடிக்கடி காணக் கிடைப்பதில்லை. அவன் பழக்க வழக்கங்களும் மாறிப்போய் அன்றைய காலத்தில் மிகக் கெட்டகாரியமான கள்ளை  குடிக்கவும் சிகரெட் பிடிக்கவும் பழகிவிட்டிருந்தான். இனிப் படிப்புச் சரிவராது என்று நினைத்த அவன் தந்தை அவர்களுக்குச் சொந்தமாகவிருந்த, ‘தங்கம்மா எலெக்ட்ரிகல்’ கடையில் தன்னோடே சேர்ந்து வியாபாரத்தை கவனி என்று விட்டு விட்டார். தேவகி மீதான காதல் யோகனுக்குள்ளேயே உழன்று கொண்டிருக்க, ஒருநாள் அவர்கள் கடைக்குப் பல்ப்பு வாங்கப்போன தேவகியின் தம்பியிடம், “கண்ணே தேவகி..  நீ மட்டும் என் காதலுக்கு ம்… ….சொல்லிவிடு. ‘தங்கம்மா எலெக்ட்ரிக்கலை’, ‘தேவகி எலெக்ட்ரிகலாக’ மாற்றி விடுகிறேன்.”                 என்றெழுதி ‘அக்காவிடம் கொடு.’என்று கொடுத்தனுப்பிய கடிதம் நேரே அப்பா கனகரிடம் போக, யோகனின் தந்தையை  தன்வீட்டுக்கு வரவழைத்து அவர் முகத்தில்  கிழித்தெறிந்த  கனகர்,

“என்ரை மகளின்ரை பேரிலை நூறு கடை திறக்கிற வசதி எனக்கிருக்கு. உன்ரை  கடை தேவையில்லை. ஊரிலை  இருக்கிறதெண்டா ஒழுங்கா இருங்கோ. இல்லாட்டி குடும்பத்தோடை  துலைசுப்போடுவன்.” என்று மிரட்டியவர், அவமானத்தால் தலைகுனிந்தபடியே அங்கிருந்து கிளம்பிய யோகனின்  தந்தையிடம், “அந்த கடுதாசியளையும் பொறுக்கிக்கொண்டு போடா  பொறுக்கி நாயே”என்றதும், விம்மி வந்த அழுகையை  முடித்தவரை அடக்கிக்கொண்டு, ‘ஒரு தறுதலையை பெத்த எனக்கு இது வேணும்.’ என்று நினைத்தபடியே  நிலமெங்கும் சிதறிக்கிடந்த கிழிந்த துண்டுகளை பொறுக்கிஎடுதுக்கொண்டு வெளியேறியவர், வீட்டுக்கு வந்து யோகனைப்பிடித்து முற்றத்து வேம்பில் கட்டி வைத்து அடித்ததை அன்று ஊரே  உச்சுக்கொட்டியபடி  வேடிக்கை பார்த்தது.
தேவகிக்கு கடிதம் கொடுக்கலாமா என்கிற குழப்பத்திலிருந்தவர்களுக்கு யோகனின் நிலையை பார்த்து, “இல்லை  வேண்டாம்” என்கிற தெளிவான முடிவுக்கு வந்திருந்தார்கள். இப்பவும் சத்தியமாக சொல்கிறேன் எனக்கு அப்படியொரு யோசனை வந்ததேயில்லை.
அந்த சம்பவத்துக்கு பிறகு யோகனை கொழும்பில் ஒரு உறவினர் வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். தேவகியின் தரிசனத்துக்காகச் சந்தியில் நின்றவர்களும் குறைந்து போக, ஒரு நாள் கனகரின் வீட்டுக்கு அவரின் நெருங்கிய உறவினர்கள் இறுகிய முகத்தோடு வருவதும் போவதுமாக இருக்கவே என்னவென்று விசாரித்தால்,
“கனகரின் தாய்க்கு சுகமில்லையாம் கடுமையாகிட்டுது.” என்று சொன்னார்கள்.

சரி அந்திரட்டிச் சோறு சாப்பிடலாமென நினைத்துக்கொண்டிருக்கும் போது தான்  யாருமே நம்பமுடியாத அந்த செய்தி கசிந்தது. பொதுவாகவே இது போன்ற பெரிய இடத்து சங்கதிகள் அவர்கள் வீட்டு வேலைக்காரர்களால் தானே கசிவது வழமை. தேவகியின்  கார் டிரைவர்  லீவன்று கள்ளடித்து விட்டு விடயத்தை மனைவியின் காதில் பெல்லடித்து விட்டார். அடுத்தநாள்  டிரைவரின் மனைவி தன் தம்பியிடம் குசுகுசுக்க, அவன் வந்து என்னிடம்  அக்கம்பக்கம் பார்த்தபடியே அந்த மாபெரும் ரகசியத்தை சொல்லி விட்டான். பிறகென்ன விடயம் மெதுவாக ஊரெங்கும் பரவத்துவங்கியது.
‘என்னது தேவகி ஓட்டிட்டாளா. ?’ ஆ ..வென்ற வாய் மூடவே பலருக்கும்  சில நிமிடமெடுத்தது. அதை விட அதிர்ச்சி, அவள் பொட்டு ரங்கனோடை  ஓடிட்டாள் என்றதுதான். ‘பொட்டு ரங்கன்’ சின்ன வயதிலிருந்தே கனகரின் இரும்புக்கடையில் வேலை பார்க்கும் மலையகத்தை சேர்ந்தவன். அங்கேயே வேலை, சாப்பாடு, படுக்கை. அவன் அழுக்குத் தெரியாமலிருக்க காக்கி உடையே அணிவான். மொட்டையென்று  யாரும் சொல்லி விடக்கூடாது என்பதுக்காக  கட்டையாக வெட்டிய முடி. யாரைப்பர்தாலும் மெல்லிய புன்னைகோடு ஒரு தலையசைப்பு. அதிகம் பேசவும் மாட்டான். எப்போதும் ஒரு சந்தனப்பொட்டு வைத்திருப்பதால் அவன் பெயரிலும் அது ஒட்டிக்கொண்டது. ஞாயிறு ஒரு நாள் லீவன்றுமட்டும் படத்துக்குப் போவான். அதுவும் கனகரின் தியேட்டரில் ஓடும் படத்துக்குத்தான். காரணம் டிக்கட் எடுக்கத்தேவையில்லை. இப்படி கனகரை சுற்றியே அவனது உலகம் இருந்ததால் கனகருக்கும் அவனில் நல்ல நம்பிக்கை வந்து விட்டிருந்தது. இப்போ கனகருக்கும் கொஞ்சம் ஓய்வு தேவைப்பட்டதால் நேரத்தோடு வீட்டுக்கு வந்து விடுவார். பொட்டுரங்கன் தான் இரவு  கணக்குப்பார்த்து கடையை பூட்டி விட்டு காசை கொண்டுவந்து கனகரிடம் கொடுத்து விட்டு போவான். நேரம் பிந்தி விட்டால் கனகரின் கார்கராச்சில் படுத்துக்கொள்வான்.
எங்கே, எப்போ, எப்பிடி வருது என்று தெரியாமல் வருவதுக்கு பெயர்தானே காதல். தேவகிக்கும் ரங்கன் மீது அது வந்துவிட ஓடி விட்டார்கள். ரங்கனோடு  ஓடி விட்டாளாம் என்றதும் ஊர்  இளைஞர்கள் எல்லோரும் கண்ணாடி முன்னால் போய் நின்று,

“எங்களிடம் இல்லாதது அப்பிடியென்ன ரங்கனிடம் இருந்திருக்குமென” வளைத்து வளைத்து பார்த்தார்கள், நானும்தான்.
தேவகி ஓடிப்போன விடயம் தெரியாமலிருக்கத்  திரை போட்டு மூடிய கார் வழக்கம்போல  பாடசாலை நேரத்துக்கு போய் வந்து கொண்டிருந்திருக்கிறது. கனகரின் தாய்க்குச்  சுகமில்லை என்றதையும் எல்லாரும் நம்பி விட்டிருந்தனர். அந்த இடைவெளிக்குள் கனகர் தனது அத்தனை  பலத்தையும், வளத்தையும் பாவித்து மலையகம் முழுவதும் தேடி ஒரு கிழமையில்  தலவாக்கலையில் தலைமறைவாக இருந்த தேவகியை கண்டுபிடித்து விட்டார். அவளை ஊருக்கு கொண்டு வராமல் அப்படியே கொழும்புக்கு கொண்டு போனதும் அடுத்த நாளே யோகனின் குடும்பமும் கொழும்புக்கு போயிருந்தனர். யோகனுக்கும் தேவகிக்கும் அவசரமாக கொழும்பிலேயே கலியாணம் நடந்ததாகத் தகவல் மட்டும் ஊரில் இருந்தவர்களுக்கு கிடைத்தது. அடுத்த சில நாட்களிலேயே தலவாக்கலையில் நடந்த தேடுதலில் தீவிரவாதி கைது என்று பொட்டு ரங்கனின் படத்தோடு செய்தி வெளியாகியிருந்தது. அதுக்குப்பிறகு அவனுக்கு என்ன நடந்ததென்று யாருக்கும்தெரியாது. ஆனால் கனகரோடு மோதினால் இதுதான் நடக்கும் என்பது மட்டும் அனைவருக்கும் தெரியும். அந்தக் கிழமையே நான் பிரான்சுக்கு வருவதுக்காகக் கொழும்பு போயிருந்தபோது யோகனை சந்தித்திருந்தேன். கனகர் தன்பெரும்பாலான  சொத்தைத் தன் பெயரில் எழுதித்தந்து தன் காலில் விழுந்து கெஞ்சியதால் தேவகியை கட்டிக்கொண்டதாகப் பெருமையாக சொன்னான். அவரே தங்களை லண்டனுக்கு அனுப்பிவைக்க ஏற்பாடுகள் செய்திருப்பதாக சொல்லியபோதே பழிவாங்கி விட்ட திருப்தி அவன் கண்களில் தெரிந்தது. நானும் பெறாமையோடு இங்கு வந்து சேர்த்து விட்டேன்.
00000000000000000000000

நான் பிரான்ஸ் வந்து சுமார் மூன்று மாதமளவில் லண்டன் போவதாக சொன்ன யோகனும் தேவகியும் இங்கு வந்து சேர்ந்திருந்தார்கள். ஒரே ஊரவன், உறவுக்கரனும் கூட என்பதால் வந்த உடனேயே என்னைத் தேடி போனடித்திருந்தான். அப்போ நான் பிரெஞ்சு படிக்க வகுப்புக்கு சென்று கொண்டிருந்ததால் வகுப்பு முடிந்த ஒரு மாலைப்பொழுதில் ஆளுக்கொரு பியர் கேனுடன் பூங்கா ஒன்றில் பேசத்தொடங்கியிருந்தோம். உறவினர் ஒருவர் வீட்டில் தங்கியிருப்பதாகவும் வேலையும் வீடும் தேடுவதாக சொன்னவன், அதுக்காக என் உதவியும் கேட்டிருந்தான். நீண்ட நேரம் நான் ஆவலுடன் காத்திருந்த தேவகியை பற்றி ஒரு வார்த்தை  கூட சொல்லாதது கொஞ்சம் ஏமாற்றமாக இருக்க நானாகவே “தேவகி எப்பிடி இருக்கிறாள்”? என்று கேட்டதும் , ஒரு இழுப்பில் பாதி பியரை முடித்தவன்,  “ஓ…….. அந்த ஓடிப்போனவளா? அவளுக்கென்ன இருக்கிறாள்.”
“அவளின்ரை அப்பன் எங்களை லண்டனுக்குத் தான் போக அனுப்பினவன். ஆனால் அவள் படிச்சவள் கெட்டிக்காரி, இங்கிலீஸ் வேற தெரியும். அங்கை போனதும் டெவலப் ஆகிப் பிறகு என்னை விட்டிட்டு திரும்பவும் ஓடிடுவாள். அதாலைதான் நான் இங்கை வந்திட்டேன்.” என்று சொல்லி முடித்தவன் அடுத்த இழுப்பில் மீதிபியரையும் முடித்து விட்டுப் புறப்பட்டு விட்டான்.
பிரான்சில் வந்தாரை வாழவைப்பது உணவுவிடுதி வேலைகள்தான். அப்படியொரு உணவகத்தில் யோகனுக்கு வேலையொன்று தேடிக்கொடுத்திருந்ததோடு எனது வீட்டுக்கு அருகிலேயே  ஒரு வீடும் பார்த்து கொடுத்திருந்தேன். ஆனால் யோகனுக்கு உணவு விடுதி வேலை என்பது பகுதிநேர வேலையைப்போல், ஏனென்றால் தேவகியை ஓடிப்போனவளே  என்று திட்டுவதும் அடிப்பதும்தான் முழுநேர வேலையாக செய்துகொண்டிருந்தான். அவளின் பெயரே அவளுக்கு மறந்துபோய் ‘ஓடிப்போனவள்’ என்கிற பெயரே மனதில் பதிந்து விடுமளவுக்கு  ஸ்ரீராமஜெயம் சொல்வது போல ஒரு நாளைக்கு குறைந்தது நூறு தடவையாவது  சொல்லிக்கொண்டேயிருப்பன். அவர்களோடு நெருங்கிப்பழகும் ஒரேயொருவன் நான் தான் என்பதால் தேவகியின்  நரகவாழ்க்கை எனக்கு மட்டுமே தெரிந்திருந்தது. இரவு நேரங்களில் சத்தம் கேட்டு அயலவர்கள் பொலீசுக்கு போனடித்து அவர்கள் வந்து யோகனை எச்சரித்து விட்டு போனதும் நடந்திருந்தது.

“உங்களுக்கு ஏதாவது பிரச்னை கொடுக்கிறனா? நீங்கள் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்போம்” என்று தங்களுக்கு தெரிந்த ஆங்கிலத்தில் தேவகியிடம் கேட்டதற்கு,
“இல்லையில்லை குடித்தால் சத்தம் போடுவார் வீட்டு சாமான்களை உடைப்பார். அவ்வளவுதான். எனக்கு  உடல் ரீதியாக எந்த பிரச்னையும் கொடுப்பதில்லை.” என்று சொல்லி விட்டாள்.
சிலஇரவுகள் கடும்குளிரில் அவளை வெளியே தள்ளி கதவை சாத்தி விட்டிருக்கிறான்.  அதைப்பார்த்து யாராவது பொலிசுக்குப் போனடிதால் அன்றிரவு முழுவதும் அவனை போலீஸ்  நிலையத்தில் கொண்டுபோய் வைத்திருந்து விட்டு எச்சரித்துக் காலை அனுப்பி விடுவார்கள். பிறகு சில நாட்கள் ஒழுங்காக இருப்பான். ஆனால் அடுத்த வாரஇறுதி நாளில் மீண்டும் முருங்கையில் ஏறி விடுவது வழமையாகிப்போனது. தேவகியும் புகார் கொடுப்பதில்லை. ஒருநாள் அவன் அடித்தஅடியில் தேவகி மயங்கி விழுந்துவிடக் கொஞ்சம் பயந்து போனவன், எனக்குதான் அவசரமாக போனடிக்க, நான்தான் முதலுதவிப் பிரிவுக்கு போனடித்து அவளை வைத்தியசாலைக்குக் கொண்டுபோயிருந்தேன். அப்போதும் யோகன் வரவேயில்லை. அவளுக்கு அனைத்து பரிசோதனைகளும் முடிந்த பின்னர் ஐந்தாவதுமாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் பெண்குழந்தைக்குத் தாயாக போகிறாள் என்கிற விடயத்தை  வைத்தியர் சொன்னார். தேவகிக்குப் பிரெஞ்சுமொழி தெரியாதென்பதால் எனக்குத் தெரிந்த அரைகுறை பிரெஞ்சில் நானே மொழிபெயர்துக்கொண்டிருந்தேன். அந்தச் செய்தியை தேவகிக்கு சொன்னதும் அவள் முகத்தில் எந்தவித உணர்ச்சியுமற்ற வழமையான  இறுகியபடியே  முகத்தை வைத்துக்கொண்டு,

“இங்கை என்ன பிள்ளை எண்டும் சொல்லிடிவினமோ”? என்றாள்.
“ஓம் என்ன பிள்ளை எண்டது மட்டுமில்லை, என்ன திகதி. கரு தரித்து  இப்போ எத்தனை  சென்றி மீற்றர் குழந்தை வளர்ந்திருக்கு எண்டு எல்லாமே விபரமா சொல்லிடுவினம்.”
என்றதும், பெண் குழந்தை தானே என்று மீண்டுமொருமுறை கேட்டு உறுதிப்படுத்தியவள்  மெல்லிதாக புன்னகைத்தாள். அதன் அர்த்தத்தை என்னால்ப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் யோகனை திருமணம் செய்த பின்னர் அவளது முதலாவது புன்னகை என்பது மட்டும் எனக்குப் புரிந்தது.

“எப்படி மயங்கி விழுந்தாள்? உடல் முழுதும்  தழும்புகள் உள்ளது. உடலும் மிக பலவீனமாக உள்ளது. நீங்கள்தான் அவரது கணவனா?” என்று  குறுக்கு விசாரணை கேள்வியை கேட்டார் வைத்தியர். நான் கொஞ்சம் பதறிப்போய் “அவள் கணவனில்லை நண்பன்.”  என்றதும் லேசாக தலையை ஆட்டியவர், “அவரது கணவனால் அவருக்கு பிரச்சனைகள் உண்டா?” என்றார்.  எங்கள் உரையாடல் வேறு எதோ விவகாரமாக போகிறது என்பதை உணர்ந்த தேவகி  குறுகிட்டு “என்ன கேக்கிறார்?” என்றாள்,
“உடம்பில கன தழும்புகள்  இருக்காம். புருசனாலை ஏதும் பிரச்சனையோ எண்டு கேக்கிறார்”  என்றதும், “நோ….. நோ எனக்கு ஒரு பிரச்சனையுமில்லை. நான்தான் அடிக்கடி மயங்கி விழுந்திடுறேன் எண்டு சொல்லுங்கோ.”  என்று விட்டாள்.

‘ச்சே. இந்த பொம்பிளையளே  இப்பிடித்தான். அவனுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்து பழிவாங்க கிடைத்த நல்ல சந்தர்ப்பத்தை தவற விட்டுவிட்டாள்.’ என்று எனக்கு அவள் மீதே கோபம் வந்தது. எப்படியெல்லாமோ ஒரு மகாராணி போல வாழ வேண்டியவள். கல்லானாலும் கணவன் புல்லாய் குடிச்சிட்டு அடிச்சாலும் புருஷன் எண்டு அவன்மீது பக்தியாய்  இருக்கிறாளா? இல்லை இவளுக்கு லூசாக்கிட்டுதா? என்று புரியாமலிருந்தது .
சில நாட்கள் வைத்திய சாலையிலேயே அவளை தங்கியிருக்க சொல்லி விட்டதால்  வெளியே வந்து யோகனுக்கு போனடித்து விடயத்தை சொல்லி விட்டு அவன் அப்பா ஆகப்போகிறான்  பெண் குழந்தை என்று சொன்னதும், அவனோ அவசரமாக,
“என்னைப்பற்றி அந்த ஓடுகாலி ஒண்டும் சொல்லேல்லை தானே”? என்று கேட்டான்.

“இல்லை தானே வழுக்கி விழுந்ததா  சொன்னவள். ஆனால் டொக்ரருக்கு  சந்தேகம் வந்திட்டுது விடுத்ததுவிடுத்து கேட்டார். அவள் ஒண்டும் சொலேல்லை. சரியான பலவீனமா இருக்கிறாள். இனிமேல்  கொஞ்சம் கவனமாயிரு. ஏதும் நடந்தால் நீயும் உள்ளுக்கை போகவேண்டி வரும். வாழ்கையை வீணாக்காதை.” என்று முடித்து விட்டேன்.
அவன் வைத்தியசாலைப் பக்கமே போகாததால் பயந்து விட்டானா என்று நினைத்துக்கொண்டு  ஒவ்வொரு நாளும் நான் வைத்திய சாலைக்கு சென்று தேவகியோடு  உரையாடிவிட்டு  செல்வது வழமையாகிவிட்டிருந்தது. சில நாளில் தேவகியும் வீடுபோய் விட்டாள். பின்னர் மிதிலா பிறந்ததும் யோகனில் சிறிது சிறிதாக மாற்றமேற்படத் தொடங்கியிருந்தது. தேவகியில் காட்டிய அத்தனை  வெறுப்பையும் மிதிலாமேல் அன்பாகப் பிழிந்தான். என்னோடு கதைக்கும் போதும்  மிதிலா என்று தொடங்கி  மகளைப்பற்றி பேசத் தொடங்குபவன் காலப்போக்கில் மகளைப்பற்றி மட்டுமே பேசுபவனாக மாறிப்போனது மட்டுமல்ல, குடிப்பழக்கத்தை  குறைத்து  சத்தம்போட்டு பேசுவதைக்கூட  சுத்தமாக நிறுத்தி விட்டான். அந்த யோகனா இவன் என்று நானே ஆச்சரியப்படும்  அளவுக்கு மாறிப்போயிருந்தான். அவனுக்கு மகள் மீதான பாசத்தை பார்க்கும்போது எனக்கு கனகரின் நினைவும் வந்துபோகும். எனக்கும் திருமணமாகி  மகள் பிறந்துவிட இப்போ நாங்கள் குடும்ப நண்பர்கள். தேவகிக்கு அடியும் பேச்சும் இல்லாமல் போனது எனக்கு நிறையவே ஆறுதல். ஆனால் அவள் மட்டும் இன்னமும் செதுக்கி விட்டதைப்போலவே உணர்வுகளை கூட மாற்றி காட்டாத  எந்தவித மாற்றமும் இல்லாமல் இயந்திரத் தனத்தோடு இருந்தாள். மிதிலாவுக்கு இப்போ இருபத்துநான்கு வயது. படித்து முடித்து விட்டு வீட்டுஏஜென்சியில்  வேலை பார்க்கிறாள். இப்படி எல்லாமே நல்லா போய்கொண்டிருந்த நேரத்தில் தான்  ….
0000000000000000000000000

யோகன் வீட்டு அழைப்பு மணியை அழுத்தினேன். கதவை திறந்தவன், “வாடா….. வா… ”  என்று வாயிலிருந்த விஸ்கி மணத்தோடு வரவேற்றவன், “இந்த சோனியளை நாட்டை விட்டு துரத்த வேணும். அகதியெண்டு சொல்லிக்கொண்டு பிச்சையெடுக்க இங்கை வாறது. பிறகு இங்கை குண்டு வைக்கிறது.” என்று ஒரு தீவிர பிரெஞ்சு வலதுசாரியைப்போலவே  திட்டியபடி  தயாராயிருந்த கிளாசில் விஸ்கியை ஊற்றி எனக்கு நீட்டினான். தொலைக்காட்சியில்  கடந்த வருடம்  எங்கள் நகரத்தில் துனிசியா நாட்டுக்காரன்  கனரக வாகனத்தால் அடித்துக்கொல்லப்பட்ட  நூற்றுக்கும் அதிகமான பொது மக்களுக்கு பிரான்சின் அதிபர் மக்குரோன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திக்கொண்டிருந்தார். நான் உள்ளே போனதுமே அடுப்படிக்குள் நின்றிருந்த தேவகி வழக்கம் போலவே அமைதியாக அறைக்குள் சென்று கதவை சாத்திக்கொண்டாள். அமைதிக்கான நோபல் பரிசை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் எனக்கிருந்தால் அதனை தேவகிக்கே  பரிந்துரை செய்வேன்.

“பார் வீட்டுக்கு வந்த உன்னை வா எண்டு கூட சொல்லாமல் எவ்வளவு அமசடக்கமா உள்ளை போறாள். எல்லாம்  இந்த ஓடு காலியால வந்தது. எல்லா சோனியளையும் அடிச்சு கொல்ல வேணும்.” என்று கத்தினான்.
துனிசியன் வாகனத்தால் பொது மக்களை கொலை செய்ததுக்கும் தேவகிக்கும் என்ன சம்பந்தம் என்று நான் குழம்பிப்போய்  விஸ்கியை ஒரே மிடறில் விழுங்கியபோது, கதவை திறந்து மிதிலா வர அவளுக்குப் பின்னால் பதுங்கியபடி இன்னொரு இளைஞன் உள்ளே வருவதா விடுவதா என தயங்கிக் கொண்டிருந்த போது, “இஸ்மாயில் உள்ளே வா.” என்றாள் .
“அங்கிள் இது இஸ்மாயில். துனிசியன். என்னோடை வேலை செய்யிறான். நாங்கள் லவ் பண்ணுறம். இரண்டு பேரும்  சேர்ந்து வாழப்போறம். உங்கடை பிரெண்டுக்கு அது பிடிக்கேல்லை. அவருக்கு கொஞ்சம் புத்திமதி சொல்லுங்கோ.”
என வேகமாகச் சொல்லிவிட்டுத்  தன்அறைக்குள் புகுந்தாள். இப்போ எனக்கு கொஞ்சம் புரிந்தது போலவும் ஆனால்  முழுவதுமாக புரியவில்லை. கையில் சில பைல்களோடு வெளியே வந்து,

“அப்பா தனிய என்னுடைய டொக்கியுமெண்டுகள் மட்டும்தான் எடுத்துக்கொண்டு போறன். நீங்கள் வாங்கித்தந்த ஒரு உடுப்புக்கூட கொண்டு போகேல்லை. இஸ்மாயிலும் நானும் இனி சேர்ந்து வாழப்போறோம். உங்களுக்கு விரும்பினால் எப்பவானாலும் வந்து பார்க்கலாம்.” என்று விட்டு கிளம்பும்போது அறையின் கதவு திறந்து வெளியே வந்த தேவகி  கையிலிருந்த பணத்தை அவளின் கையில் திணித்துத்  தன்கழுத்திலிருந்த சங்கிலியையும் அவள் கழுத்தில் போட்டுவிட்டு மீண்டும் அறைக்குள் சென்று கதவைச் சாத்திக்கொண்டாள். சந்தேகமேயில்லை நோபல் பரிசு அவளுக்குத்தான். ஆனால் இவ்வளவு நேரமும் யோகன் சோனகரை எதுக்கு திட்டினான் என்பது மட்டும் விளங்கியது.
மிதிலா வெளியே போவதை விறைத்து பார்த்தபடியே  இருந்தவன். அவள் போனதும் அவனது அத்தனை கோபமும் வீராப்பும் உடைந்து ஒரு குழந்தைபோல பெரும் சத்தமாய் விக்கிவிக்கி அழத் தொடங்கிவிட்டான். அவனை தட்டித்தடவி  ஆறுதல் சொல்ல முயற்சித்துக் கொண்டிருக்கும்போது மீண்டும் அறைக்கதவை திறந்து வெளியே வந்த தேவகி எங்களிருவரையும் மாறிமாறிப் பார்த்தவள், மிதிலா சாத்தாமல் சென்றுவிட்டிருந்த வெளிக்கதவை சாத்திவிட்டு மீண்டும் தன் அறைக்குள் புகுந்து சடாரெனக் கதவைச் சாத்திக்கொண்டாள்.
‘ச்சே என்ன பொம்பிளை இவள் ? ஒரு புருசன்காரன் பிள்ளை பிரிந்து போகிற துயரத்தில்  குழந்தை மாதிரிக் கேவிக்கேவி அழுகிறான். ஆறுதல் சொல்லாமல் அறைக்குள் போய்க் கதவைச் சாத்துகிறாளே! கொஞ்சம்கூட  மனிதாபிமானமே இல்லாத கல்நெஞ்சக்காரி.’

என்று நினைத்தபடி கொஞ்ச நேரத்துக்கு முன்னர் அவளுக்குப் பரிந்துரை செய்த நோபல் பரிசை மீளப்பெற்றுக்கொண்டு யோகனுக்கு ஆறுதல் சொல்லிச் சோபாவில் படுக்க வைத்து விட்டு அங்கிருந்து கிளம்பி விட்டேன்.
மகள் போன சோகத்தில் அன்று  வேலைக்கும் போகாமல் குடிப்பதும் தேவகியை திட்டுவதுமே  முழு வேலையாக செய்து கொண்டிருந்தவன், அடுத்த நாளும் காலை எழுந்து தெளியாத பாதி போதையில் கடைக்குப்போய் விஸ்கி வாங்கிக்கொண்டு வந்து கதவைத்திறந்து ‘அடியே ஓடிப்போனவளே…..’ என்று கத்தியபடி அறையை திறந்து பார்த்தான். வீட்டில் அவள் இல்லை.   விஸ்கியை  திறந்து மேசையிலிருந்த கிளாசில் ஊற்ற போனபோது அதனடியில் இருந்த கடிதத்தை எடுத்து மங்கலாகத் தெரிந்த எழுத்துக்களை கண்ணை கசக்கிவிட்டுப்  படிக்கத் தொடங்கினான்.
பேனாவால் உன் பெயரைக்கூட எழுத எனக்கு மனமில்லை …..

இத்தனை வருடங்களாக  எனக்கும் என் மகளுக்கும் இருக்க இடமளித்து உடை உணவு கொடுத்ததுக்காக நன்றி சொல்லப் போவதுமில்லை. ஏனெனில் ஊரில் தன்கௌரவமும்  செல்வாக்கும் பணத்திமிரும் சரிந்து போய்  விடக்கூடாது என்பதுக்காக கனகரத்தினம்  உனக்கு சேவகம் செய்ய என்னையும் பெரும்செல்வத்தையும் உன்னிடம் ஒப்படை த்திருந்தார். அவர் கொடுத்த பொன்னும்பொருளும் பணமும் என்னையும் என்மகளையும் காலம் முழுதும்  வைத்துச் சாப்பாடு போட போதுமானது. ஆனாலும் அதுக்குக் கைமாறாக உனக்குத் தேவைப்பட்ட போதெல்லாம் காமத்தைக் கரைக்க என்னைப் பயன்படுத்த அனுமதித்துள்ளேன். அதில் மகளை காப்பாற்றும் என் சுயநலமும் இருந்தது. என்வயிற்றில் வளர்வது ஆணா பெண்ணா என்று தெரியா விட்டாலும் மகிழ்வோடு சுமந்து கொண்டிருந்த எனக்கு இங்கு வைத்தியர் பெண்குழந்தை என்று சொன்னதுமே நானும் இன்னொரு தடவை  பிறந்தது போன்ற உணர்வு. என்மகளை நன்றாக வளர்த்து  நல்ல கல்வியை கொடுத்து அவள் விரும்புகிறவனின்  கையில் பிடித்து கொடுப்பதே என்னுள் முழுவதுமாகப் பரவியிருந்தது. உன் காமக்கரைசலில் ஒருகரு உருப்பெற்று விடாமலிருக்க அத்தனை அவதானமாகவிருந்தாலும்  இரண்டுதடவை  என்அவதானம் பிழைத்துப் போய் சுயமாகவே  முயற்சிஎடுத்து  கருவைக்கலைக்க நான் பட்ட வேதனையும் வலிகளும் ……வேண்டாம், அவற்றை உனக்கு விளங்கப்படுத்த வேண்டிய தேவையுமில்லை. எங்களுக்கு இன்னொரு குழந்தை பிறந்தால் நிச்சயமாக  உன்னுடையதும்  என்தாய் தந்தை உறவுகள் அனைவர் மீதுமுள்ள வெறுப்பு அனைத்தையும் அந்தக்குழந்தை மீது காட்டி விடுவேனோ என்கிற பயம்தான் என்னை அப்படியொரு முடிவைஎடுக்க வைத்தது.

அப்படியானால் மிதிலா யாரென்று உனக்குள் இப்போது சந்தேகம் எட்டிப்பார்க்கத் தொடங்கியிருக்கும். அது என்னுடையதும் ரங்கனுடையதுமான உண்மையான காதலில்  கருப்பெற்ற குழந்தை. உன்னுடைய மகள்அல்ல. இந்த உண்மையை நான் அவளிடம் சொல்லவில்லை, சொல்லப்போவதுமில்லை. உனக்கு துணிவிருந்தால் நீயே அவளிடம் சொல்லிக்கொள்ளலாம். எனது இத்தனை வருட நோக்கம், தவம் இப்போ நிறைவேறி விட்டது. நான் போகிறேன். என்னை தேடும் முயற்சியில் இறங்காதே. அதில் பயனுமில்லை. இப்போ உன் விஸ்கியை  தாராளமாக  குடிக்கலாம். சியேர்ஸ்…..
இப்படிக்கு
ஓடிப்போனவள்
கைகள் வேகமாக நடுக்கமெடுத்து போதை இறங்கி விட்டிருந்தது. தொண்டை வரண்டது போலவிருக்கக் கிளாசில் ஊற்றிய விஸ்கியை கலவையில்லாமலே ஒரே மடக்கில் குடித்தவன், ‘அது என்னுடையதும் ரங்கனுடைதுமான உண்மையான காதலில் கருப்பெற்ற குழந்தை. உன்னுடைய மகள் அல்ல.’
என்கிற வசனத்தை திரும்ப திரும்பப் பல தடவை படித்தவன், மேசையில் ஓங்கி குத்திவிட்டு   தொலைபேசியை எடுத்து அழுத்தினான்.
00000000000000000000000000

கலவி முடிந்த களைப்பு இருவரினதும் மூசுக்காற்று அறை முழுதும் பரவி ஜன்னல் கண்ணாடிகளிலும் அப்பியிருந்தது. இடுப்புவரை இழுத்து விடப்பட்ட போர்வைக்குள் என் மார்பின் முடிகளை அவள் கைகளால் கோதி விளையாடிக்கொண்டிருக்கும்போது,    இடைவிடாமல் அழைத்த தொலைபேசியை எடுத்துக் காதில்வைத்தேன்.
“மச்சான் எங்கை நிக்கிறாய்? மனிசியைக் காணேலை. கடிதமெழுதி வைச்சிட்டு எங்கையோ ஓடிப்போயிட்டாள். எனக்கு என்ன செய்யுறதெண்டு தெரியேல்லை. பொலிசுக்குப் போறது நல்லதெண்டுபடுது. உடன வாறியோ?”
“என்னடா சொல்லுறாய்?அப்பிடி ஒண்டும் இருக்காது. பதட்டப்படாதை. நான் ஒரு  மீற்றிங்கில  இருக்கிறன். அரை மணித்தியாலத்தில வாறன்.” போன்  கட்டானது.
“யாரது? என்ரை  புருசன் தானே?”
“ம் …..”
“என்னவாம்?”
“உன்னைக் காணேல்லையாம். பதட்டமாயிருக்கிறான். பொலிசுக்குப் போறதுக்கு என்னை வரட்டாம்.”
“நீயே  கண்டு பிடிச்சு குடுக்கலாமே?”
“எனக்கென்ன  விசரோ …அதுசரி கடிதத்திலை என்ன எழுதி வைச்சனி?”
“எல்லாமே ..”
“எல்லாமே எண்டால். மிதிலாவைப் பற்றியுமோ?”
“ம் ……”
“அடியே அவன் மிதிலாவிலை எவ்வளவு பாசமெண்டு உனக்கு தெரியும்தானே. உயிரையே வைச்சிருக்கிறான். தற்கொலை செய்தாலும் செய்துபோடுவான். எதுக்கு அதை சொன்னனி?”
லேசாக சிரித்தவள், “தற்கொலை செய்யிறதெண்டால் இவ்வளவு நேரத்துக்கு செய்திருக்க வேணும். தண்ணியை போட்டிட்டு உனக்கு போனடிச்சு விவரம் சொல்லிக்கொண்டிருக்க  மாட்டான். நண்பனிலை பாசமெண்டால் இப்பவே ஓடிப்போ.”
“சரி ..சரி .. கோவிக்காதை. அவளை மேலே இழுத்து உதட்டில் ஒரு இச் வைத்து அடுத்ததா என்ன செய்யிற திட்டம்?”
“ஓடிப்போகப் போறன்..”
“யாரோடை?”
என் வலப்பக்க மார்பு காம்பை விரல்களால் கசக்கி நுள்ளியவள், “உங்களைத் திருத்தவே முடியாதடா” என்று என்னைத் தள்ளிவிட்டாள்.
பயங்கர வலியெடுத்தாலும் காட்டிக்கொள்ளாமல், லேசாய் தடவிவிட்டு  மீண்டும் அவளை இழுத்தணைத்து, “சரி என்ன செய்யப் போகிறாய் ? அதையாவது சொல்லு.”
என்னிலிருந்து விடுவித்து முகட்டை அண்ணாந்து பார்த்த படியே, “என்னைச்சுற்றி  மனித முகங்களோடு நாக்கில் நீர்வடிய அலைந்த ஓநாய்களில் நீ மட்டும் கொஞ்சம் நல்ல ஓநாய். அதுதான் கடைசியாக  உன்னோடு இருந்திட்டு போகவந்தன்.”
“அப்போ நானும் நல்லவனில்லையா?”
“உற்ற நண்பனுக்கும் ,ஊரில இருக்கிற மனிசிக்கும் போனடிச்சு தேவகியோடை  படுத்திருக்கிறன். நான் நல்லவனா எண்டு கேள், அவையே சொல்லுவினம்.”
கேள்வி  சுருக்கென்று  குத்தினாலும் சிரித்து சமாளிப்பதைத்  தவிர வேறுவழியில்லை.
“நான் கெட்டவன் என்றால் எதுக்கு இவ்வளவுதூரம் பழகினாய்?
“உண்மையை சொல்லு உனக்கு  என்னில ஆசை இருக்கேல்லையா?”
“அது வந்து ….. “
“உன்னால இல்லையெண்டு சொல்லமுடியாது. என்னை  சாறியில கோயில்லை வைச்சு பார்த்த பார்வையிலையே எனக்கு விளங்கிட்டுது. எல்லாரையும் போல உனக்கும் அதை எனக்கு சொல்ல பயம். அந்த விசயத்தில யோகன் பரவாயில்லை. ஆனா பிறகு என்னை டொக்டரிட்டை  கூட்டிக்கொண்டு  போன பிறகு யோகனுக்கும் எனக்கும் கலியாணம் நடந்ததிகதியும்  கர்ப்பமான திகதியும் வித்தியாசமா இருக்கே? எண்டு என்னட்டை  நீ கேட்டுச் சிரித்த அந்த விசமச் சிரிப்பிலையே எனக்கு விளங்கிட்டுது.”
“ஆனா நான் உன்னை வெருட்டேல்லை …..”
“அந்த சிரிப்பை விட வேறையென்ன வேணும். எனக்குப் பொம்பிளைப்பிள்ளை எண்டு தெரிஞ்ச துக்கு பிறகு எல்லாத்துக்குமே நான் தயாராகிட்டன். அதை வளத்தெடுத்து அவள் விரும்பிறவனுக்கே கையிலை பிடிச்சு குடுக்கிற வரை உன்னால எந்த பிரச்னையும் வராமலிருக்க நானே உன்னோடை இசைஞ்சு போறதைத் தவிர வேற வழியிருக்கேல்லை…”
“பரவாயில்லையே புத்திசாலி எண்டு மனதுக்குள் பாராட்டினாலும். இந்தத்தடவை விருது எதையும் பரிந்துரைப்பதாயில்லை. சரி எங்கேதான் போகப்போகிறாய்?”
“அதெல்லாம் உனக்கு சொல்லத்தேவையில்லை. போகமுதல் கடைசியாய் இன்னொரு தடவை, ஆனால் கொஞ்சம் வித்தியாசமாய் என்றபடி போர்வையை விலக்கி எழுந்தவள் அதே போர்வையால் என் கைகள் இரண்டையும் கட்டியவளிடம்,
“ஏய் ..என்ன செய்யுறாய் …. ?”
என் உதட்டில் அவளின்  சுட்டு விரலை அழுத்தி,
“உஸ் ……எதுவும் கதைக்க கூடாது.” என்றுவிட்டு இறுக்க கட்டிய கைகளை தலைக்கு மேலாக உயர்த்தி பின்பக்கமாக கட்டில் சட்டத்தில் கட்டியவள், மேலே ஏறி அமர்ந்திருந்து உதட்டில் முத்தமிட்டு கொஞ்சம் கொஞ்சமாக கீழிறங்கிக் கொண்டிருந்தாள்.
“கள்ளி ..இப்படியெல்லாம் உனக்கு தெரியுமா?”
என்தொடைகளுக்கு நடுவே அவள் தலை அசையத்தொடங்கியதும், “இதுக்காகவாவது ஏதாவது விருது கொடுக்கத்தான் வேணும்” என்று நினைத்தபடியே இன்பவலியில் லேசாய்க் கண்ணை மூடியபோதுதான் அந்த மரணவலி ..
“ஐயோ…..”.
உடைந்த குழாயிலிருந்து தண்ணீர் சீறியடிப்பது போல தொடை நடுவே இரத்தம் சீறிக்கொண்டிருக்கத் தாங்கமுடியாத வலியில் உடலைப் புரட்டிப்புரட்டிக் கால்களைக்   கட்டிலில் அடித்துக் கட்டியிருந்த கைகளையும் விடுவிக்கும் முயற்சியோடு கத்திக்கொண்டிருக்க, எழுந்து பக்கத்திலிருந்த குப்பைக் கூடைக்குள் துப்பியவள், பல நாள் பட்டினி கிடந்த சிறுத்தையொன்று  கிடைத்த  மானைக் கலைத்து வேட்டையாடிக் களைப்பை மறந்து பசிக்குச் சாப்பிட்டு முடித்த பின்னர் ருசிக்காக வாயில் வழியும் இரத்தத்தை நாவால் சுழற்றி நக்குவதைப்போலவே தன் வாயில் வழிந்த இரத்தத்தை  நாவால் துடைத்து  உச்சுக்கொட்டி ருசித்து விழுங்கிவிட்டு,
“இது இருக்கிறதால தானே உங்களுக்கெல்லாம் இவ்வளவு ஆட்டம் ?” என்றபடி தலகணையை எடுத்து என் முகத்தில் அழுத்திப்பிடிக்க, மூச்சுத் திணறிக் கண்கள் இருண்டு அடித்துக்கொண்டிருந்த கால்கள் சோர்ந்துபோய் உடல் குளிர்ந்து லேசாகி  பறக்கத் தொடங்கியது போலதொரு உணர்வு.
அசைவுகள் அனைத்தும் அடங்கியதும் தலகணையை எடுத்துப் பார்த்தவள், அவசரமாக உடைகளை அணிந்தபடி வெளியேறிவளின் உருவம் நிழலாய் தெரிய எனது  வாய் முணுமுணுத்தது, “ஓ …டி …ப் …போ…ன ..வ ..ளே …….. !”

செய்தது நீ தானா ..

3:50 AM, Posted by sathiri, No Comment

செய்தது நீ தானா ..
சிறுகதை ..நடு இணைய இதழுக்காக ..


விடுமுறை நாளென்றாலே கொஞ்சநேரம் அதிகமாக நித்திரை கொள்ளவேண்டும் என்று நினைத்துக்கொண்டு படுத்தாலும் வேலை நேரத்துக்கே வழமை போல எழும்பிவிடுவேன். ஆனால் அவசரப்படாமல் ஆடியசைந்து ஒரு தேநீரை போட்டு எடுத்துக்கொண்டு போனில் யூ ரியுப் அப்பில்  இளையராஜாவின் இனிய கானங்களை எடுத்து அப்படியே விரலால் சுண்டிவிட  அது தொலைகாட்சி திரைக்கு தாவி அகன்ற திரையில் ஓடத் தொடங்கியதும் சோபாவில் சாய்ந்தபடி  கண்ணை மூடி காட்சியை பார்க்காமல் கேட்பதே ஒரு இன்பம். தமிழ் சினிமாவுக்கு இளையராஜா வராமல் போயிருந்தால் எனது தலைமுறையினருக்கு தேனிசைத் தென்றல் தேவா தான் தெய்வமாகியிருப்பர். வித்தியாசாகரும்,மரகத மணியும் மனதில் நின்றிருப்பார்கள். வாத்தியார் பிள்ளை மக்கு என்பதைப்போல இளையராஜா  வாரிசுகளால் இசையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லையென்று நினைத்துக்கொண்டிருக்கும்போதே டிக் , டிக், டிக் படத்திலிருந்து “ஓ மலர்ந்திட நடமிடும் பொன்மயிலே” பாடல் ஒலிக்கத் தொடங்கியிருந்தது. கண்ணைத் திறந்து பார்க்காமலேயே மனத்திரையில் சவுக்குத் தோப்பில் கமலும் அவர் பின்னல் மாதவி நீச்சலுடையில்  ஓடிக் கொண்டிருந்தார்கள். அப்போதுதான் திடீரென எனக்கு அவனின் நினைவு மீண்டும்  மூளை மடிப்புக்களிலிருந்து சிரமப்பட்டு வெளி  வந்தது.

அவன் உருவம் கூட சிகரெட்டின் புகையிலிருந்து கிளம்பும்  வடிவங்களைப்போல மங்கலாக  நினைவில் உள்ளது. எண்பதுகளின் இறுதி நான் தாய்லாந்தில் புக்கெட் நகருக்கு அருகில் தங்கியிருந்த காலம். தங்கியிருந்தது வீடா, குடிசையா என்று பட்டிமன்றமே நடத்தலாம். கீழ் பாதி சீமெந்து. மேல் பாதி மரப்பலகைகள் பொருத்தப்பட்டுக் கூரைக்குத் தகரம் போடப்பட்ட ஒரேயொரு சிறிய அறை. அதற்கு தகரத்தாலான கதவு. முன்னால்  மூன்று பக்கமும் மூங்கில் பாய்களால் மறைக்கப்பட்ட காற்றோட்டமான சிறிய கூடம். இந்தக் குடிசை வீட்டில் ஒரு மின்னடுப்பு சில அலுமினியப் பாத்திரங்களோடு ஆங்கிலம் மூலம் தாய் மொழி கற்றுக்கொள்ளும் புத்தகமும். பெறுமதியான பொருட்கள் என்றால் சிறிய கலர் தொலைக்காட்சியும் வி சி ஆரும் தான். அப்போ தமிழ் சேனல்கள் எல்லாம் இல்லை. எனவே சிங்கப்பூரிலிருந்து தமிழ்ப் பட கசெட்டுக்களை தபாலில் எடுத்து பார்ப்பதுதான் பொழுதுபோக்கு. அதைவிட என்னிடம் ஒரு வாக் மேனும் இருந்தது.

அன்று மதியம்  தனியொருவனுக்காக எப்படி விதம் விதமாக சமைக்க முடியும்? ஒரு வெறுப்போடு “வெந்ததை தின்று வேகின்ற உடல்” என்கிற பட்டினத்தார் பாடலைப்  பாடிய படியே மின் அடுப்பில் கொதிக்கத் தொடங்கிய உலையில் அரிசி ,பருப்பு, கீரை, வட்டமாக வெட்டிய காரட் எல்லாவற்றையும் போட்டு அலுமினிய சட்டியின் வாயை மூடி விட்டு. பொரிப்பதற்காக பொலிதீன் பையில்  கட்டி வாங்கி வந்த தவளைக் கால்களை, அதன்  பையைப் பிரித்து ஒரு தட்டில் போட்டு கொஞ்சம் உப்பும் மிளகாய் தூளும் பிரட்டி ஊற வைத்து விட்டு .வாங்கி வந்த கூலான பியர் போத்தல் ஒன்றை எடுத்து மூடியை பல்லால் கடித்து திறந்து சில மிடறு  விழுங்கிய போதுதான் அன்றைய கொடும் வெக்கையும் ,சந்தைக்கு  கெந்திக் கெந்தியே நடந்து போய் விட்டு வந்த காயம் பட்ட காலின் வலியும் கொஞ்சம் குறைந்தது போலவிருந்தது. இரண்டாவது சத்திர சிகிச்சையின் பின்னர் உடைந்த எலும்பை தகடுகள் வைத்து பொருத்தி விட்டிருந்தார்கள். வெளிக் காயம் தான் ஆற வேண்டியிருந்தது. அதுக்கு ஒவ்வொரு நாளும் எனக்கு நானே மருந்து கட்டிக் கொள்வதுதான் அன்றாட கடமை. அடுப்பில் குழையல் சோறு வெந்த பின்னர் இரவுக்கு கொஞ்சம் எடுத்து வைத்துவிட்டு.  ஊற வைத்த தவளைக் கால்களை பொரித்து  இன்னொரு பியரையும் குடித்து சாப்பிட்டு விட்டால், பாயை விரித்து சுவரோடு தலைகாணியை அணைத்து  சரிந்திருந்த படியே எப்போதுமே வழைமையாக கேட்கும் வீடியோ காசெட்டை போட்டு விடுவேன். ஊமை விழிகள் படத்தின் தோல்வி நிலையென நினைத்தால் பாடல் போய்க் கொண்டிருக்கும்போது உணர்ச்சி வசப்பட்டாலும், அடுத்து எங்கள் தமிழினம் தூங்குவதோ  என்கிற பாடலின் போது எப்படியும் நித்திரையாகிப் போய் விடுவேன்.

ஆனால் அன்று அடுத்த பாடல் போய் லேசாக கண்கள் செருகிக் கொண்டிருந்த போதே வாசலில் ரகு அண்ணையின் மோட்டர் சைக்கிள் வந்து நின்றது. அருகிலிருந்த பியர் போத்தலை அவசரமாக தலகணைக்கு கீழே மறைத்து விட்டு எழும்பி நின்றேன். கூடவே இன்னொருத்தன். அப்போதுதான் வளர்த்த மீசையை வளிதிருப்பன் என தோன்றியது. கையில் கொண்டு வந்த பையை மார்போடு கட்டியனைத்த படியே வயதுக்கு வந்த பெண்ணைப்போல  ரகு அண்ணனுக்கு பின்னல் நெளிந்த படி நின்றிருந்தான்.
“என்ன அண்ணை  திடீரெண்டு?” என்று கேட்டதும்,
 “ஒண்டுமில்லை இவனுக்கு இங்கை மசாஜ்  பழக்கி அனுப்ப வேணுமாம். இரண்டு நாளைக்கு உன்னோடை வைச்சிரு. பிறகு வந்து கூட்டி போயிடுவன்.” என்றார்.

ஆயுத பயிற்சிக்குதானே உலகம் முழுக்க ஆக்களை அனுப்புவினம். இதென்ன புதிசா மசாஜ் பழக அனுப்பியிருக்கு ? தலைவருக்கு ஒரு வேளை நாரிப்பிடிப்பு ஏதும் வந்திருக்குகுமோ? அப்பிடியிருந்தாலும் கேரளா மூலிகை மசாஜ் தானே நல்லது.எதுக்கு தாய்லாந்து? என்று யோசித்தாலும். கேள்வி எதுவும் கேட்க முடியாதே…ரகு அண்ணா போய் விட்டார். ஆனாலும் பையை கட்டிப்பிடித்து நின்றவனிடம்,
 “உன்ரை   பையை ஒருத்தரும் களவெடுக்க மாட்டினம். எங்கையாவது வை”. என்றுவிட்டு “சாப்பிட்டியா?” என்றேன் . “ம்.. ” என்று தலையை மட்டும் ஆட்டினான்.
நான் சமைத்ததை யாருக்காவது கொடுக்க வேண்டும் என்கிற என்னுடைய பழி வாங்கும் உணர்ச்சி அன்றும் தோல்வியடைத்து போனது. சரி இரண்டு நாளைக்கு இங்கை தானே இருக்கப் போறான் அப்ப பாக்கலாம் என்று என்னை நானே தேற்றிக்கொண்டு, எனக்காக அங்கு ஒரு பாய் தலைகாணி  மட்டுமேயிருந்ததால் அவனுக்கு என்னத்தை கொடுக்கலாமென யோசிக்கும் போதே தனது பையை திறந்து ஒரு சாறத்தை எடுத்து உதறி நிலத்தில் விரித்து விட்டு அமர்ந்துகொண்டு தொலைக்காட்சியை பார்க்கத் தொடங்கி விட்டிருந்தான்.

இரண்டு நாளில் வருவதாகச் சொன்ன ரகு அண்ணன் மறு நாள் மாலையே வந்து அவனைக்கூட்டிக் கொண்டு போய் விட்டார். அந்த ஒரு நாளில் நானும் அவனும் கதைத்த வார்த்தைகளை எண்ணி விடலாம். எனக்கும் அதிகம் கதைக்கும் பழக்கம் இல்லை. ரகு அண்ணா வரும்போது சில சினிமா பட கசெட்டுக்களையும் கொடுத்துவிட்டுப் போனதால் பொழுதுபோய் விட்டது. சுமார் இரண்டு மாதம் கழித்து மீண்டும் அவனை ரகு அண்ணன் என்னோடு கொண்டு வந்து விட்டு . இன்னொரு பாயும் தலைகாணியும் வாங்கிக் கொடுத்து விட்டே போனார். இந்தத்தடவை நானும் அவனும் சில வார்த்தைகள் அதிகமாகப் பேசியிருப்போம். ஒருநாள் இரவு சாப்பிட்டு விட்டு. கமல் நடித்த டிக், டிக், டிக் படத்தை பல தடவை பார்த்து மனப்படமாகிப் போயிருந்தாலும் அதில் மாதவியைப் பார்ப்பதற்காகவே அன்றும் கசெட்டை போட்டு ஓட விட்டேன். அதில் கமல் மசாஜ் செய்துகொள்வதைப்போல ஒரு காட்சி வரும். அப்போ தான் அவனிடம்,
“நீயும் மசாஜ் பழகினனி தானே இப்படியெல்லாம் செய்ய வருமா?” என்று கேட்டதும். கொஞ்சம் யோசித்தவன்,
“உடுப்பு எல்லாத்தையும் கழட்டிப்போட்டு துவாயை கட்டிக்கொண்டு குப்புற படுங்கோ.” என்றவன், சமையலுக்கு வைத்திருந்த தேங்காய் எண்ணையை எடுத்துக் கொண்டு வந்து உள்ளங் கையில் எடுத்த எண்ணையை பாயில் குப்புறப்படுத்திருந்த என் பிடரியிலிருந்து சொட்டு சொட்டாக நடு முள்ளந்தண்டு வழியே வழிய விட்டுக்கொண்டு இடுப்புவரை சென்றவன், கட்டியிருந்த துவாயை சட்டென்று உருவி விட்டு தொடர்ந்தும் கால்களின் இறுதி வரை எண்ணையை பூசி முடித்தான். 

சட்டென்று துவாயை உருவியெடுத்ததை எதிர்பாக்காத நான் “டேய்”. என்றபடி எழும்ப முயன்றபோது .”அசையக் கூடாது”. என்று அவனது கட்டளை கடுமையாகவே வந்ததால் அப்படியே படுத்து விட்டேன். முள்ளந்தண்டின் ஒவ்வொரு மூட்டுகளிலும் அவனது விரல்கள் விளையாடியதில் என் முதுகிலும் டிக்,டிக், டிக் ..
கால் வரை சென்றவன் இப்போ திரும்பி படுக்கச்சொன்னான். தொடைகளுக்கு நடுவே துவாயால் மறைத்தபடி திரும்பி படுத்துக் கொண்டேன். இப்போ நெற்றியிலிருந்து தொடங்கினான். உடலில் புத்துணர்வு மட்டுமல்ல ஔவையார் சொன்ன பத்தாவது உணர்வும் சேர்ந்தே கிளர்ந்து நின்றது. கற்று வந்த மொத்த வித்தையையும் என்மேல் இறக்கி வைத்து விட்டு குளிக்கப் போய் விட்டான். இன்னொரு தடவை இவன் கையால் மசாஜ் செய்தால் நிச்சயம் நான் ஓரினச்சேர்க்கையாளனாக மாறிவிடுவேன் என்கிற பயம் எழுந்திருந்தது. சில நாட்களிலேயே ரகு அண்ணன் வந்து அவனை கூட்டிப் போய் விட்டார். கடைசி வரை அவன் பெயரை நான் கேட்கவேயில்லை. கேட்டிருந்தாலும் அவன் உண்மை பெயரை சொல்லாமல் வாயில் வந்த ஏதாவதொரு பெயரைத்தான் சொல்லியிருப்பான். அவனும் என் பெயரை கேட்கவேயில்லை. கேட்டிருந்தாலும் இங்கேயும் அதே நிலைமைதான். நானும் சில நாட்களின் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு விட்டிருந்ததோடு அவனையும் மறந்து விட்டிருந்தேன் .
0000

அந்த நாட்டில் புதிதாக பதவிக்கு வந்திருந்த அரசுத் தலைவருக்கும் அதே நாட்டிலேயே தன் இனத்துக்காகப் புதிதாக அரசமைக்கப் போராடிக்கொண்டிருக்கும் தலைவருக்குமிடையில்  பொது எதிரியை விரட்ட  இரகசியப் பேச்சு வார்த்தைகள் தொடங்கியுள்ளதாக அறிந்துகொண்டேன். அரசுத் தலைவருக்கும் அரசமைக்கப் போராடிக்கொண்டிருந்த தலைவருக்கும் பல ஒற்றுமைகள் இருந்தது. இருவருமே சாதியப் படி நிலைகளில் கீழிருந்து வந்தவர்கள். தன் சார்ந்தவர்களுக்கும் தன்னை நம்பியவர்களுக்கும் எது வேண்டுமானாலும் கொடுப்பார்கள். ஆனால் தங்கள் இருப்புக்கோ பதவிக்கோ  ஆபத்து என்று நினைத்து விட்டாலே அது யாராக இருந்தாலும்  போட்டுத் தள்ளிவிட்டு போய்க் கொண்டிருக்கும் நபர்கள். இந்த இருவருக்கிடையிலும் தான் பேச்சு வார்த்தை. பேச்சுவார்த்தையைத் தொடங்கும்போதே பொதுப் பிரச்சனையான இனப்பிரச்சனையை தீர்ப்பது என்று பேசிக்கொண்டாலும் கிடைக்கும் சந்தர்ப்பத்தில் ஒருவரை மற்றொருவர் தீர்த்து விடுவது என்பதுதான் அவர்களது திட்டம். ஆனாலும் இருவருக்குமான பொது எதிரிகளை முதலில் முடித்துவிடுவோம், பின்னர் எங்கள் பலத்தை பரிசீலிக்கலாம் என்கிற ரீதியில் பேச்சுக்கள் போய்க்கொண்டிருந்தது .
பிரதி நிதிகளுடனான பல சுற்று பேச்சுக்கள் முடிந்த பின்னர்  நட்சத்திர விடுதியொன்றில் தலைமைச் சிங்கத்தை. தலைமை தாங்கிய சிங்கம் சந்தித்துக் கொண்டது.

 பேசி முடித்த இறுதியில்,
“நீங்கள் களைத்தது போல உள்ளது. இவன் நல்லதொரு மசாஜ் நிபுணன். நீங்கள்  விரும்பினால் இவன் உடல் பிடித்து விடுவான் கொஞ்சம் இளைப்பாறிக் கொள்ளுங்கள்.” என்றது தலைமை தாங்கிய சிங்கம். சிறிது யோசித்த தலைமை சிங்கம் தனது மெய்ப்பாதுகாவலர்களைப் பார்த்து தலையசைத்து விட்டு அறை ஒன்றில் புகுந்து கொள்ள, அவனைத்  தனியாக அழத்துச் சென்ற பாதுகாவலர்கள் உடல் முழுதும் பரிசோதனை செய்துவிட்டு அந்த அறைக்குள் அனுப்பிக்  கதவைச்  சாத்திவிட்டார்கள். அவர் அதுவாம்,சைக்கிள் ஓடுவதில் வல்லுனராம் என ஏற்கனவே அவரைப்பற்றிய கிசு கிசுக்கள் பரவியிருந்தது. அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பதற்காகவே உள்ளூர் அழகியை திருமணம் செய்து கொண்டார். ஆனாலும் கிசு கிசுப்புகளுக்கு பஞ்சமிருக்கவில்லை. பக்கத்து அறையிலேயே  ஐஸ் கட்டியை கரைத்துக் கொண்டிருந்த விஸ்கியை அருந்தியபடி அணைந்து போகும் சிகரெட்டில் அடுத்த சிகரெட்டை பற்றவைத்த படியே கைக்கடிகாரத்தை பார்த்து பெருமிதத்தோடு புன்னகைத்துக் கொண்டது தலைமை தாங்கிய சிங்கம். அடிக்கடி நட்சத்திர விடுதியில் பேச்சுவார்தைகள் நடந்து கொண்டிருந்தாலும் சுவி மட்டும் தலைவரின் வீட்டுக்கு எப்போது வேண்டுமானாலும் போகும் அளவுக்கு நெருக்கம் இறுக்கமாகியிருந்தது.
முன்னைநாள் பாதுகாப்பு அமைச்சர் ,முன்னைநாள் முப்படைத்தளபதி,கிளர்ச்சிக் குழு உறுப்பினர்கள் என ஒரு தரப்பிலும்.தனிநாட்டுக்கு வாக்கு கேட்டு பாராளுமன்றம் போன தலைவர் ,மாற்று அமைப்பு உறுப்பினர்கள் என இந்து சமூத்திரத்தில் மிதக்கும் தீவின்  ஆறுகளிலும் குளங்களிலும் பிணம் மிதக்கும் தீவாகிப் போனது. அப்போதுதான் ஒரு ஆங்கிலப் பத்திரிகையில் டெனிஸ் விளையாடும் நெட்டையான உள்ளூர் அழகியின்  குட்டைப் பாவாடையில் பிட்டம்   தெரியும் படமொன்று வெளியாகியிருந்தது. அதனை அப்படியே வெட்டி நான் வாசித்த வீட்டின்  தட்டையான தகர கதவில் ஒட்டியிருந்தேன். சில நாட்களிலேயே அந்த படத்தை எடுத்த பத்திரிகையாளரை காணவில்லை என்கிற செய்தியும் வந்திருந்தது.
௦௦௦௦

நகருக்கு வெளியே இருந்த ரம்புட்டான் காட்டுக்கு நடுவே அமைந்திருந்த ஆடம்பரமான சிறிய பங்களாவுக்குள் அவனை ஏற்றி வந்த கார் நுழைந்தது. சாதாரணமாக வெளியேயிருந்து பார்த்தால் அப்படியொரு பங்களா இருப்பதே தெரியாது. மெய்ப்பாதுகாவலர்களின் உடல் சோதனையை முடித்துக் கொண்டு அரசுத் தலைவரின் அறைக்குள் அவன் நுழைந்திருந்தான். வழக்கத்தை விட அன்று அந்த அறை முழுதும் வெள்ளை மலர்களாலும் தென்னோலை குருத்தினாலான வண்ண வண்ண வடிவங்களாலும் அலங்கரிக்கப் பட்டிருக்க நடுவே வெள்ளை வெளேரென்ற கட்டிலில் ஒற்றைத் துணியில்லாமல் உருண்டு திரண்ட கறுத்த உருவம் அவனை,
“வா நண்பா. நண்பா வா. இன்று நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரிகள் யாருமே இல்லை. அனைவரையும் ஒழித்து விட்டேன். என் உள்ளம் உற்சாகமாக உள்ளது. அதைப்போலவே என் உடலையும் உற்சாகப்படுத்து”. என்று  அழைத்தார். அங்கிருந்த குளியலறைக்குள் புகுந்து  ஆடைகள் அனைத்தையும் களைந்து குளித்துவிட்டு வெளியே வந்தவன், அங்கிருந்த குடுவையை கையிலெடுத்தபடி கட்டிலுக்கு அருகே மசாஜ் செய்வதற்காகவே பிரத்தியேகமாக செய்யப் பட்டிருந்த  சிறிய வாங்கில் குப்புறப்படுத்திருந்தவரின் பின்பக்கமாக குடுவையிலிருந்த மூலிகை எண்ணையை வழியவிட்டு தொடங்கிய மசாஜ் ஒரு மணி நேரத்தின் பின்னர் அங்கிருந்த கட்டிலில் முடிவடைந்திருந்தது.
இருவருமே லேசாகக் களைத்துப்போயிருந்தனர். கட்டிலில் இருந்து எழும்பியவன் குளியலறைக்குள் சென்று ஆடைகளை அணிந்துகொண்டு வெளிய வந்தபோது, இடுப்பில் ஒரு துண்டை  மட்டும் கட்டிக்கொண்டு நின்றிருந்தவர் திடீரென அவன் முன்னால் வந்து நின்று கையில் இரண்டாக மடிக்கப் பட்ட வெற்றிலையில் இருந்த  மோதிரத்தை எடுத்து அவன் இடதுகை விரலில் மாட்டிவிட்டு, “இனிமேல் நீ என்னை முதலாளி என்று அழைக்கக் கூடாது. நண்பன் என்றே அழைக்கலாம்.” என்றதும், அவரின் செய்கை எவ்வித உணர்வுகளையும் கொடுத்ததாக அவன் முகத்தில் தெரியவில்லை. லேசாக சிரித்தவன், விரலில் இருந்த மோதிரத்தை தடவிப் பார்த்தபடியே “உங்களை நண்பன் என்று அழைக்க மனம் வரவில்லை முதலாளி என்றே அழைக்கிறேன்.அது மட்டுமல்ல விரைவில் நானும் உங்களுக்கு ஒரு பரிசு கொடுக்கவிருக்கிறேன்”.என்றபடியே அங்கிருந்து கிளம்பிப் போய்விட்டான்.
௦௦௦௦௦

இப்போதெல்லாம் முதலாளிகளும் அரசியல் கட்சி தலைவர்களும் கொண்டாடும் நாளாகிவிட்ட மே தினக் கொண்டாட்டத்தை நடத்த அரசுத் தலைவர் உத்தரவிட்டிருந்தது  மட்டுமல்லாமல் ஊர்வலத்துக்கு  அவரே தலைமையும் தாங்கினார். வழியெங்கும் காவல்துறையின் பாதுகாப்போடு தலைவர் முன்னால் நடந்துவர, தொண்டர்களில் “தலைவன் வாழ்க” கோசம் நகரையே அதிர வைத்தபடி அந்த ஊர்வலம் பிரதான சந்தியை அண்மித்துக் கொண்டிருந்தது. அங்கிருந்த காவல் நிலையத்துக்கு முன்னாலேயே அவரின் தொண்டர்கள் சிலர் சுருட்டியிருந்த கோர்வை பட்டாசுகளை வீதியில் பரப்பத் தொடங்கினார்கள். அப்போதான் எதிர்த்திசையில் சைக்கிளில் வந்துகொண்டிருந்தவனைப் பாதுகாப்பு கடமையிலிருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தவே.அதனைக் கவனித்த தலைவரோ, “அவன் எனது நண்பன். அவனை விடுங்கள்.” என்றதும், சைக்கிளை அங்கேயே நிறுத்தி விட்டு அவரை நோக்கி சென்றவன், “முதலாளி நான் சொன்ன பரிசை உங்களுக்கு இப்போ தரப் போகிறேன்” என்றபடியே இறுக்கி அணைத்தபோது வீதியில் பரப்பி முடித்த பட்டாசுகளில் ஒருவன் நெருப்பை வைத்தான். பட பட வென்ற பட்டாசு சத்தங்களோடு டமாரென்ற பெரும் சத்தம்…. அவன் உடலில் கட்டியிருந்த குண்டு வெடிக்க தசைத் துண்டுகள் எங்கும் சிதறியது.
அதுவரை அனைவரும் வாழ்த்திய தலைவனும் வாழ்த்திய தொண்டர்கள் பலரும் உடல் சிதறி இறந்துபோய்க் கிடந்தார்கள்.மிகுதிப்பேர்  ஒரு தடவை வெடித்த குண்டு மறுபடி வெடிக்காது என்பதைக்கூட யோசிக்காமல் பயத்தில் எங்கு ஓடுவது என்று தெரியாமலே ஓடிக்கொண்டிருந்தார்கள் ..
௦௦௦௦௦

இப்போதெல்லாம்  breaking news க்கு நடுவே பிரதான செய்திகள் சொல்லிப் பழகிவிட்ட தமிழ் ஊடகங்கள் இல்லாத காலகட்டத்தில் ஹாங் ஹாங் விமான நிலையத்தில் ஒரு விமானத்துக்காக காத்திருக்கும் மண்டபத்தில் சி என் என் தொலைக் காட்சி செய்திகளை நான் பார்த்துக் கொண்டிருந்தபோது திடிரென போடப்பட்ட  “breaking news”அந்த நாட்டின் அரசுத் தலைவர் தற்கொலை குண்டு தாரியால் கொல்லப்பட்டுள்ளார்.தற்கொலை குண்டுதாரியின் பெயர் சுவி  என அடையாளம் கண்டுள்ளதாக காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்” .என்று ஒரு புகைப் படத்தையும் காட்டினார்கள் .”அட செய்தது நீ தானா” என்று மனதில் நினைத்தபடியே அக்கம் பக்கம் பார்த்துக் கொண்டேன் ..

அவலங்கள் நூல் குறித்து.தோழர் சம்சுதீன் ஹீரா

4:41 AM, Posted by sathiri, No Comment

அவலங்கள் நூல் குறித்து.புதிய புத்தகம் பேசுது இதழில் தோழர் Samsu Deen Heera
 
சரியான தருனத்தில் பேசப்படாத உண்மைகள், பொய்களை மட்டுமல்ல பேரழிவையும் ஏற்படுத்தி விடுகின்றன..

ஒரு எழுத்தாளன் என்பவன் ஒரு சமூகம் சொல்லத் தயங்கி நிற்கும் பொருளை, அந்தச் சமூகத்தை நோக்கி, சமூகத்தின் சார்பாக, சமூகத்தின் குரலாகப் பேசவேண்டுமென்பார் சா. தமிழ்ச்செல்வன். நீண்ட நெடிய ஈழ விடுதலைப் போராட்டம் உச்சத்திலிருந்த காலத்தையும் அது வீழ்ச்சியடைந்த காலத்தையும் எவ்வளவோ இலக்கியங்கள் இரத்தமும் சதையுமாகப் பதிவு செய்திருக்கின்றன. ஆனால் துரதிர்ஷ்டமாக அவற்றில் பெரும்பாலான இலக்கியங்கள் நாயக பிம்பங்களைக் கட்டமைக்கவோ அல்லது ஏற்கனவே கட்டிவைக்கப்பட்டிருந்த புனித பிம்பங்களின் மீது சிறு கீரலும் விழாதவாறு கவனமாகப் பூசி மொழுகவோதான் செய்தன. அவற்றிலெல்லாம் பேசப்படாத நுண்ணரசியலை, தற்போதைய இளைய தலைமுறைப் படைப்பாளிகளின் நவீன இலக்கியங்கள், மக்களின் குரலில் உரக்கப் பேசத்துவங்கியிருக்கின்றன. இப்போக்கானது ஈழ இலங்கியங்களில் ஆரோக்கியமான முன்னெடுப்பையும் காத்திரமான விவாதங்களையும் வலுவாகக் கோரி நிற்கின்றன.
இலக்கியங்கள் என்பவை சமூகத்தின் விளைபொருள். ஒரு எழுத்தாளன் என்பவன் தன்னைப்பாதித்த சமூகக் கூறுகளைத் தன்வழியே மக்களுக்குக் கடத்துகிற ஒரு ஊடுகடத்தி மட்டுமே. ஒரு தூய்மையான ஊடுகடத்தியாக இருக்கும் வரையில்தான் நேர்மையான படைப்புகளை ஒரு படைப்பாளனிடம் எதிர்பார்க்க முடியும்.


அமெரிக்காவின் இரட்டைக்கோபுரத் தகர்ப்பைத் தொடர்ந்து ஜனநாயகத்தின் ஆன்மாவின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று உலகமே பதட்டமடைந்து கொண்டிருந்தபோது, உலகம் முழுவதும் திரும்பத் திரும்ப ஒளிபரப்பப்பட்ட அந்த காணொளியின் உண்மைத்தன்மை குறித்தும் சில அமெரிக்க ஊடகங்கள் சந்தேகங்களை எழுப்பின.
பறவை மோதினாலே உடைந்து சிதறக்கூடிய மெல்லிய உலோகத்தால் செய்யப்பட்டிருக்கும் விமானத்தின் மூக்குப்பகுதி அவ்வளவு பெரிய கட்டிடத்தைத் துளைத்துக் கொண்டு கொஞ்சமும் சேதமில்லாமல் வெளியே வந்தது குறித்து, அந்தக் கட்டிடங்களில் வேலை செய்துகொண்டிருந்த ஆயிரக்கணக்கான யூத ஊழியர்கள், தாக்குதல் நிகழ்ந்த அன்றைய தினம் சொல்லி வைத்ததுபோல விடுமுறை எடுத்துக்கொண்டது குறித்து, அவ்வளவு பெரிய கட்டிடம் சீட்டுக்கட்டுபோல சரிந்ததற்கான முகாந்திரம் குறித்தெல்லாம் கேள்விகளை முன்வைத்தன. தேசநலன், தேசபக்தி, பணம், சலுகைகள் என்று பல வழிகளில் அவற்றின் வாயை அடைத்தது அமெரிக்க அரசு. தொடர்ச்சியாக அப்பாவிகளின் மீது பழியையும் போர்களையும் தினித்து எண்ணெய் வளமுள்ள நாடுகளைச் சூரையாடியது அமெரிக்க வல்லரசு. சரியான தருனத்தில் பேசப்படாத உண்மைகள், பொய்களை மட்டுமல்ல பேரழிவுகளையும் ஏற்படுத்தி விடுகின்றன.

அதுபோலவே ஈழப்போராட்ட வரலாற்றில், தங்களின் பலம் பலவீனம் குறித்த, சர்வதேச அரசியல் குறித்த புலிகளின் பொருத்தமற்ற மதிப்பீடுகள் ஒரு மாபெரும் இனப்பேரழிவுக்கு இட்டுச்சென்றது. இந்தியாவை, குறிப்பாக சில தமிழக அரசியல் கட்சிகளின் பொய்யான பிழைப்புவாத வார்த்தை ஜாலங்களையும், நம்பகத்தன்மையற்ற வாக்குறுதிகளையும் தமிழீழ அரசின் தலைமை கடைசிக்கட்டம் வரை நம்பிக்கொண்டிருந்ததாக வரும் செய்திகள் உண்மையில் ஆச்சரியமாகவே இருக்கின்றன. புலிகளின் அரசியல் குறித்து, தமிழீழ அரசின் ஆட்சி குறித்து உலகத்தமிழர்களிடையே கட்டமைக்கப் பட்டிருந்த பிம்பங்களின் வழியே அதுவரை ஈழப்போராட்டங்களைப் பார்த்துக் கொண்டிருந்த அனைவருக்கும் இந்த முடிவு பேரதிர்ச்சியாகவே இருந்திருக்கும். யாருமே இந்த முடிவை எதிர்பார்த்திருக்கவோ நம்பவோ செய்திருக்க மாட்டார்கள்.

எந்த ஒரு போராட்டத்தின் வீழ்ச்சியையும் நாம் ஆராயப் புகும்போது, புறக்காரணிகளோடு அதன் அகக்காரணிகளையும் சேர்த்தே ஆராயும் போதுதான் அதன் முழுப்பரிமாணம் தெரியவரும். எவ்வித புனிதக் கட்டுமானங்களின் பெயராலும் உண்மையை மறைக்க முயல்வதென்பது அழுகிய முட்டையை அடைகாப்பது போன்று எந்தப்பயனுமற்றது. புலிகளின் வீழ்ச்சியோடுதான் அந்த செயற்கை பிம்பத்தின் வீழ்ச்சியும் தொடர்கிறது.
தான் பேச வருகிற பொருள் குறித்து எந்த அடைப்புக்குள்ளும் அடங்கிக் கொள்ளாமல் பேசவேண்டுமென்ற வேட்கையாலும் நேர்மையான உந்துதலாலும் முன்நகர்த்தப்படும் படைப்பாளிகளால் மட்டுமே சிறந்த படைப்புகளைக் கொடுக்க முடியும். அவ்வகையில் சமீபத்தில் நான் வாசித்த ’அவலங்கள்’ சிறுகதைத் தொகுப்பை ஒரு நேர்மையான படைப்பாகக் கருத முடிகிறது. சாத்திரியின் எழுத்து, ஏற்கனவே கட்டமைக்கப் பட்டிருந்த பிம்பங்களுக்கும் உண்மைக்கும் இடையே ஊடறுத்துப் பயணிக்கிறது. பொது வெளியில் பேசப்படாத புலிகளின் கடந்த காலத்தை எந்தச் சமரசமுமின்றி உரக்கப்பேசுவதன் மூலம் கற்பனை பிம்பங்களை உடைத்தெறிகிறது. புதிய விவாதங்களுக்கான வெளியைத் திறந்து விட்டிருக்கிறது. அதனாலேயே சாத்திரி பலவித எதிர்ப்புகளைச் சம்பாதித்தும் கொண்டிருக்கிறார்.
பௌத்தப் பேரினவாத ஒடுக்குமுறையக் கண்டுவளர்ந்த, இன விடுதலையை இலட்சியமாகக் கொண்ட, தமிழீழ கணவுகண்டு இயக்கங்களில் சேர்ந்த லட்சக்கணக்கான இளைஞர்களைப்போலவே, யாழ்ப்பாணம் மானிப்பாயில் பிறந்து வளர்ந்த சாத்திரியையும் வீரஞ்செறிந்த ஈழ விடுதலைப்போராட்டம் தன்னுடன் இனைத்துக் கொண்டது. புலிகள் இயக்கத்தின் உறுப்பினராகச் சேர்ந்து இலங்கையிலும் வெளிநாடுகளிலும் செயல்பட்ட சாத்திரி இப்போது பிரான்சில் வசிக்கிறார். அவரது கடந்தகால நினைவுகளைத் தொட்டுச் செல்லும் அவரது முதல் புதினமான ஆயுத எழுத்து வெளிவந்தபோதே பரவலான கவனத்தையும் விமர்சனங்களையும் எதிர்கொண்டவர்.
பிரபாகரன் மரணத்தைத் தொடர்ந்து பலவிதமான குழப்பங்களும் வதந்திகளும் நிலவிய சூழலில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமான தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்ட நிகழ்வானது, எவ்வித விமர்சனங்களுக்கும் அஞ்சிடாமல் ஒளியைப்போல நேர்கோட்டில் பயணிக்கிற சாத்திரியின் உளவலிமைக்குச் சான்று. ஒரு மாபெரும் வரலாற்றுக் காலகட்டத்தின் நிகழ்வுகளையும், ஒரு பேரழிவைச் சந்தித்து நிற்கிற மக்களின் வாழ்வியலையும், தனது சொந்த அனுபவங்களையும் புனைவின் வழியே எந்தவிதப் பாசாங்குகளுமின்றி நேர்மையாகக் கடத்தத் துணிகிற யாருக்கும் தேவையான உளவலிமை சாத்திரிக்கு உள்ளது.
பதட்டத்தோடு ஓடிவருகிற ஒருவன் சட்டென நம் கைகளைப் பற்றிக் கொள்ளும்போது அந்த நபரது பதட்டம் நமக்குள்ளே கடத்தப்படுவதுபோல ’அவலங்களின்’ கதைமாந்தர்கள்; அதை வாசிக்கிற வாசகனுக்குள் ஒருவித பதட்டத்தோடு நுழைந்துவிடுகிறார்கள். அந்தப் பதட்டத்தை கொஞ்சமும் மிச்சமின்றி நமக்குள் இறக்கிவைத்து விடுகிறார்கள். சாத்திரியை வாசிக்கத் தயாராகும் ஒருவனுக்கு சாத்திரியைப்போலவே திடமான உளவலிமை தேவைப்படுகிறது. வெறுமனே அழுகைகளையும் துக்கங்களையும் எழுத்தாக்கி கழிவிறக்கம் தேடுகிற சராசரி யுக்திகளை சாத்திரி கையாளவில்லை.

ஒரு பேரழிவு ஏற்படுத்திய பெருந்துக்கத்தின் வலிகளுக்குக் கொஞ்சமும் குறைவில்லாமல், அப்போது நிலவிய அரசியல் சூழல் ஏற்படுத்திய ஏமாற்றங்களை, துரோகங்களை, உள்ளார்ந்த வலிகளாகச் சுமந்து திரிகிற சாதாரனமான மனிதர்களின் கதைகள் இவை. அந்தக் கதைமாந்தர்கள் அரசியல் பேசவில்லை, ஆனாலும் அக்காலகட்டத்தில் செல்வாக்கு செலுத்திய அரசியல் நிலைமைகளை நமக்குப் புரியவைக்கிறார்கள். அந்தக் கதை மாந்தர்களின் வலியை, கதைக்களத்தின் அரசியலை நமக்குள் நேர்த்தியாகக் கடத்திவிடுகிற வித்தையில் சாத்திரி நிச்சயமாக வென்று விட்டார் என்றே சொல்ல வேண்டும். உண்மைக்கும் புனைவுக்கும் இடையேயுள்ள மெல்லிய திவலைகளின்மீது இந்தக் கதைகளை அதன்போக்கில் மிதக்க விட்டிருப்பதே சாத்திரியின் வெற்றி.
சாத்திரியின் கதாப்பாத்திரங்கள் விசித்திரமானவர்கள். வாசிக்கிற அனைவரின் மனதிலும் பல நாட்களுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர்கள். அவர்களின் ஆழ்மனப் போராட்டங்கள், அவர்களின் அந்தரங்கங்கள், எதிர்கொள்ளும் சவால்கள், புலம்பெயர் வாழ்வின் வலிகள், துரோகங்கள், விரக்திகள் இவையனைத்தையும் திறந்த மனதோடு வாசிக்கிற ஒருவன், தனக்குள் ஏற்படுத்தி வைத்திருக்கிற அத்துனை முன் முடிவுகளையும், புனிதக் கட்டமைப்பாக, நாயக பிம்பமாக அதுவரை ஏற்படுத்தி வைத்திருந்த அனைத்து உருவகங்களையும் மறுபரிசீலனை செய்யவேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்படுகிறான்.

1970 லிருந்து 2016 வரையிலான காலப்பகுதியைக் களமாகக் கொண்ட இக்கதைகள் 2006 லிருந்து 2016 வரையிலான வெவ்வேறு காலகட்டத்தில் எழுதப்பட்டிருக்கின்றன. பெரும்பாலும் பெண்களின் பெயரைக்கொண்ட பண்ணிரெண்டு கதைகளைக் கொண்டது இந்தத் தொகுப்பு. ஈழத்திலும், புலம்பெயர்ந்த பிற தேசங்களிலும் ஈழத்தமிழர்களின் துயரார்ந்த வாழ்வியலை அரசியல் கண்ணோட்டத்தோடு சமூக பொருளாதார பண்பாட்டுச் சிக்கல்களை வெவ்வேறு களத்தில் கதைகளாக்கியிருக்கிறார் சாத்திரி. குறிப்பாக பெரும்பாலான கதைகளில் பெண்களையே மைய அச்சாகக் கொண்டு கதைக்களத்தை வார்த்திருப்பதன் மூலம் அந்தக் களங்களில் நிலவிவந்த ஆண்மைய அரசியலை அம்பலப்படுத்துகிறார்.
இந்திய அமைதிப்படையால் இழுத்துச்செல்லப்படும் ராணியக்கா சிதைந்த நிலையில் நிர்வாணமாய்த் தெருவில் கிடக்கிறாள். அதை விவரிக்கிற ஆசிரியர் இப்படிச் சொல்கிறார்.

‘… ராணியக்கா அந்த மிருகங்களுடன் முடிந்தவரை போராடியிருக்க வேண்டும். அதனால் அவர் தலையை அசைக்க முடியாதபடி ஒரு பெரிய கல்லை தலைப்பக்கமாக வைத்து அதில் அவளது தலைமுடியைக் கட்டி, அமைதிகாக்க வந்த காந்தி தேசத்து அகிம்சாவாதிகள் தங்கள் கருணை அன்பு சமாதானம் எல்லாவற்றையுமே காமக்கழிவுகளாய் அந்த அப்பாவிப் பெண்ணின் மீது வெளியேற்றிவிட்டுச் சென்றுவிட்டார்கள்.’
இந்திய அமைதிப் படை ஈழத்தமிழ்ப் பெண்களிடம் செய்த அக்கிரமங்களை இதைவிட எப்படி எளிமையாகச் சொல்லிவிட முடியும்? சுயநினைவு திரும்பிய பிறகும்கூட, பலரின் பலநூறு கேள்விகளுக்கு அஞ்சி மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணாகவே தன் வாழ்வைத் தொடர்கிற ராணியக்கா ஒருநாள் இறந்துபோகிறாள். கதையின் இறுதியில் இப்படிக்கேட்கிறார் ஆசிரியர். ‘இவ்வளவு கொடுமைகளை தன் இளம் வயதில் ராணியக்கா அனுபவிக்க அவள் செய்த பாவம்தான் என்ன?..இந்தக் கேள்வி ஈழத்தில் பல ராணியக்காக்கள் பற்றிய கேள்வியுமாகும்.’

சாதியப்படிநிலையில் கீழடுக்கிலிருக்கும் சிறுமி மல்லிகாவுக்கு அவனது உயர்சாதி நன்பன் கொடுத்த சட்டையை அணிந்துகொண்டு பள்ளிக்குச் செல்கிறாள். கீழ்சாதிக்காரச் சிறுமி இவ்வளவ நல்ல சட்டை அணிகிறாளென்றால் அது களவெடுத்த சட்டைதானென்று மல்லிகாவோடு அவளது தந்தையையும் அடித்து உதைக்கிறார்கள். உதிரம் கலந்த எச்சிலைத் துப்பிக்கொண்டு அழுதபடியே செல்கிற மல்லிகாவில் துவங்குகிற கதை, அந்தச்சமூகத்தில் முக்கியப் பங்காற்றிய சாதியப்பாத்திரத்தையும், கோவில் நுழைவுக்குக்கூட துப்பாக்கியேந்திப் போராடிய போராட்டங்களையும் சொல்லிச் செல்கிறது.
பெரும் புயலில் பிய்த்தெரியப்பட்ட குடிசைகளைப்போல போர்களால் சிதறடிக்கப்பட்டு மூலைக்கொன்றாய்த் தூக்கியெறியப்பட்ட குடும்பங்களின் அவலங்களை, புலம் பெயர் வாழ்வின் வலிகளை, இழந்துவிட்ட பூர்வீக வேர்களின் வாசத்திற்கும், தஞ்சமடைந்த தூரதேசத்தின் வாழ்விற்குமிடையே ஊசலாடும் உணர்வுப்பூர்வமான தடுமாற்றங்களைச் சொல்லும் சிமிக்கி என்ற கதை.

கடற்புலியாய் இருந்து கண்ணை இழந்து இளமையை இழந்து நம்பிக்கையை இழந்து எல்லாம் இழந்த அலைமகளை திருமணம் செய்துகொள்ளக் கேட்கும் ஜேக்கப்பிடம் ”இயக்கத்துக்குப் போகும்போதே இருபது வயது, பதினைந்து வருட இயக்க வாழ்க்கை, இப்போ வயது முப்பத்தெட்டைத் தொடப்போகிறது, ஒற்றைக்கண்ணும் இல்லை, வசதியும் இல்லை.. இப்பவெல்லாம் மனசுக்கு முடியாதென்று தெரியிற எதையும் நான் முயற்சிக்கிறதில்லை ஜேக்கப்..” என்று சொல்கிற விஜியின் முடிவு உலுக்கியெடுக்கிறது. கடுங்குளிரில் உறைந்து போன விஜியைப் போலவே நமது மனமும் சிலவிணாடிகள் உறைந்துதான் போய்விடுகிறது.

புலம்பெயர் தமிழரான அமுதனைத்தேடி இருவர் வருகின்றனர். அதில் புலிகள் அமைப்புக்கு நிதி திரட்டும் அப்பாத்துரையும் ஒருவர். சமீபத்தில் புலிகள் சில பகுதிகளைக் கைவிட்டு பின்வாங்கிய செய்தியை அவர்களிடம் கவலையோடு பகிர்ந்துகொள்ளும் அமுதனிடம், இது ஒரு தந்திரோபாயமான பின்வாங்கலென்றும், தலைவர் வேறொரு திட்டம் வைத்திருப்பதாகவும் அதுவே ‘கடைசி அடி’யாக இருக்குமென்றும் அதற்காக பெரிய அளவில் நிதி தேவைப்படுகிறதென்றும் சொல்கிறார் அப்பாத்துரை.
பத்தாயிரம் சுவிஸ் பிராங்க் கேட்ட அப்பாத்துரையிடம் அவ்வளவு பெரிய தொகையைத் தன்னால் தர இயலாதென்று மறுக்கிறார் அமுதன். நீங்கள் நன்கொடையாகத் தரவேண்டாம் வங்கிக் கடனாகக் கொடுத்தால் போதும் இயக்கம் தவனை கட்டிவிடுமென்று சொல்லி அமுதனின் பாஸ்போட் விசா மற்றும் சில பத்திரங்களில்கையெழுத்தும் பெற்றுச் செல்கின்றனர்.
வங்கியிலிருந்து ஒரு லட்சம் பிராங்க் கடன் பெற்றதாக வந்த தகவலைத் தொடர்ந்து அதிர்ச்சியடையும் அமுதன் அப்பாத்துரையிடம் அதுகுறித்துக் கேட்கிறார். இயக்கம் தேவை கருதி சிலரது கணக்கில் அதிகப் பணம் பெற்றதாகச் சொல்கிறார் அப்பாத்துரை.
ஈழப்போரின் இறுதிக்கட்டம் வரை, முன்னேறிக்கொண்டிருக்கிறோம் வென்றுவிடுவோம் இதோ ஈழம் அமையப்போகிறது என்றெல்லாம் நம்பவைத்து அமுதனை ஏமாற்றும் அப்பாத்துரை, தன் மச்சினன் பெயரில் பிரம்மாண்டமான ரெஸ்ட்டாரண்ட் அமைத்து செட்டிலாகி விடுகிறார். அமுதன் கடன் காரனாகி, நொடிந்து, குடும்பத் தகராறு பெருகி விவாகரத்து வரை சென்று குடும்பமே சின்னாப்பின்னமாகிப் போவதை உணர்வுப்பூர்வமாக விவரிக்கிறது ’கடைசி அடி’ கதை.

புலியொருவனை இராணுவத்திடமிருந்து அடைக்கலம் கொடுத்துக் காப்பாற்றும் கைரி என்ற கிழவியின் மகன் வேறு இயக்கத்தைச் சேர்ந்தவன் என்ற காரனத்தால் சக புலியால் கொல்லப்படுகிறாள். தேடி வந்தபோது கைரியின் மகன் அகப்படவில்லை என்கிற ஒரு காரணமே ’கைரி’ கொல்லப்படுவதற்குப் போதுமானதாக இருக்கிறது.
புரட்சிக்குத் துணையாய் வந்தவளுக்குப் பிள்ளையைக் கொடுத்துவிட்டு ஜெர்மனிக்குத் தப்பியோடிய சுரேந்தர் அங்கிருந்து புரட்சிகர கவிதை பேசுவதை வாணொலியில் கேட்க நேரும் மல்லிகாவின் கதை.
அகதி அந்தஸ்த்து பெருவதற்காக அமைச்சரின் காரை முற்றுகையிடுகிற நாடகத்தை அறங்கேற்றப்போய் அம்பலப்பட்டு காவல் துறையால் கைதுசெய்யப்பட்டு போலி என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்படும் ரமனனின் கதை.

ஒருவனால் வஞ்சிக்கப்பட்டு விபச்சாரத்தில் தள்ளப்படும் ஒருத்தி பிற்காலத்தில் அவளே பலரை அந்தத் தொழிலில் தள்ளிவிடுகிற நிலைக்குப் போகிற உளவியலை, வாழ்க்கைச் சூழலைச் சொல்கிற கதை பீனா கொலடா.
ஆபத்துகள் நிறைந்த ஆயுதக்கடத்தலில் ஈடுபடும் கடற்புலிகளில் ஒருவன் நடுக்கடலில் இறந்துவிட, அவனை ஒரு தீவில் புதைத்துவிட்டு வருகிற சக புலிகளின் பாசப்போராட்டத்தைச் சொல்கிற முகவரி தொலைத்த முகங்கள் கதை.
போதை மருந்துகளுக்கு அடிமையாகிச் சீரழியும் இளம் தமிழ்ப்பெண்ணின் துயரார்ந்த முடிவைச் சொல்லும் அஞ்சலி என்ற கதை.
என ஒவ்வொரு கதையை வாசித்து முடிக்கிறபோதும் கண்களை மூடி சில விணாடிகள் பெருமூச்சு விடவைக்கும் அழுத்தமான களங்கள். ஈழப் போராட்டத்தின் நீண்ட நெடிய வரலாறானது, அதில் பங்கெடுத்தவர்கள், வென்றவர்கள், தோற்றவர்கள், இனவாதப் பாசிசத்தால் தமிழ் மக்களின் மீது வலிந்து திணிக்கப்பட்ட போர்களால் உயிரிழந்து உடைமைகளையிழந்து வாழ்விழந்த சொத்துக்களையிழந்த பல்லாயிரக்கணக்கான மக்களின் கதைகளைத் தன்னுள்ளே சுமந்துகொண்டு காட்டாற்று வெள்ளம்போலப் பயணித்துக்கொண்டே இருக்கிறது. ஆனால் இக்கதைகள் அதைப் பற்றியவையல்ல.

இவ்வரலாற்றுப் பெரும் பயணத்தில் சொந்த இனத்தால் ஏமாற்றப்பட்ட வஞ்சிக்கப்பட்ட முகவரியற்ற அல்லது முகவரி தொலைந்த , அடையாளப்படுத்தப் படாமல் புறக்கனிக்கப்பட்ட எளிய மக்களின் கதைகள் இவை. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் முகத்தை எளிய மக்களின் வாழ்வியலை அதன் உள்ளார்ந்த தன்மை சிதையாமல் அழகியலோடு இலக்கியப் படுத்தியிருக்கிற சாத்திரிக்கு நன்றிகளும் வாழ்த்துதோழர்